• Jun 23 2026

பாலத்தோப்பூர் -ஸாஹிறா வித்தியாலயத்தில் மாடிக் கட்டிடம் திறந்து வைப்பு!

Ziya / Jun 22nd 2026, 2:26 pm
image

மூதூர் வலயக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட பாலத்தோப்பூர் -ஸாஹிறா வித்தியாலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட புதிய மாடிக் கட்டிடத் திறப்புவிழா மூதூர் வலயக் கல்வி பணிப்பாளர் ஏ.எல்.சிராஜ் தலைமையில் இன்று (22) இடம்பெற்றது.


பாடசாலை முதல்வர் பௌசுல் அமீர் தலைமையிலான பாடசாலை குழாத்தினர் இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.


கிழக்கு மாகாண சபையின் விசேட அபிவிருத்தி நிதி ஒதுக்கீட்டில் 2 கோடி  ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட இவ் கட்டிடத்தை கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர முதன்மை அதிதியாக கலந்து கொண்டு திறந்து வைத்தார்.


இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எஸ்.ஆர்.ஹஸந்தி,மூதூர் வலயக் கல்வி அலுவலக பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள்,உதவிக் கல்விப் பணிப்பாளர்கள்,ஆசிரிய ஆலோசகர்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். 

பாலத்தோப்பூர் -ஸாஹிறா வித்தியாலயத்தில் மாடிக் கட்டிடம் திறந்து வைப்பு மூதூர் வலயக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட பாலத்தோப்பூர் -ஸாஹிறா வித்தியாலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட புதிய மாடிக் கட்டிடத் திறப்புவிழா மூதூர் வலயக் கல்வி பணிப்பாளர் ஏ.எல்.சிராஜ் தலைமையில் இன்று (22) இடம்பெற்றது.பாடசாலை முதல்வர் பௌசுல் அமீர் தலைமையிலான பாடசாலை குழாத்தினர் இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.கிழக்கு மாகாண சபையின் விசேட அபிவிருத்தி நிதி ஒதுக்கீட்டில் 2 கோடி  ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட இவ் கட்டிடத்தை கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர முதன்மை அதிதியாக கலந்து கொண்டு திறந்து வைத்தார்.இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எஸ்.ஆர்.ஹஸந்தி,மூதூர் வலயக் கல்வி அலுவலக பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள்,உதவிக் கல்விப் பணிப்பாளர்கள்,ஆசிரிய ஆலோசகர்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். 

Advertisement

Advertisement

Advertisement