இலங்கையில் முன்பள்ளி வயதிலுள்ள சிறுவர்களின் டிஜிட்டல் திரைப் பயன்பாடு (Screen Time) கணிசமாக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் மூலம், முன்பள்ளி வயதிலுள்ள சிறுவர்களில் 64 சதவீதமானோர் தினமும் 30 நிமிடங்களுக்கும் அதிகமான நேரத்தை கைபேசி, கணினி அல்லது டெப் போன்ற டிஜிட்டல் சாதனங்களைப் பயன்படுத்துவதில் செலவிடுவதாகக் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரைகளின்படி, சிறுவர்கள் தினமும் 30 நிமிடங்களுக்கும் குறைவான நேரமே டிஜிட்டல் திரைகளைப் பயன்படுத்த வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலைமையை கருத்திற்கொண்டு, முன்பள்ளிச் சிறுவர்களுக்கான சுகாதார மேம்பாட்டுத் திட்டமொன்றையும் வழிகாட்டித் தொடரொன்றையும் அறிமுகப்படுத்த சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடர்பில் தெளிவுபடுத்துவதற்காக சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க, சிறுவர்களின் திரைப் பயன்பாடு மாத்திரமன்றி அவர்களின் உறக்கம், உணவுப் பழக்கம் மற்றும் பல் சுகாதாரம் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஆய்வில், 32 சதவீதமான சிறுவர்கள் தினமும் 10 முதல் 11 மணித்தியாலங்களுக்கும் குறைவாகவே உறங்குவதாகக் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன், சுமார் 43 சதவீதமான சிறுவர்கள் உணவு உண்ணும்போது டிஜிட்டல் திரைகளைப் பார்த்துக்கொண்டே உணவருந்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
திரையைப் பார்த்துக்கொண்டு உணவருந்தும்போது, சிறுவர்கள் உணவில் போதிய கவனம் செலுத்தாத நிலை ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சுமார் 80 சதவீதமான சிறுவர்களே தினமும் இரு தடவைகள் பல் துலக்குவதாகவும் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும், சிறுவர்களைப் பராமரிக்கும் பெற்றோர் அல்லது முன்பள்ளி ஆசிரியர்களில் சுமார் 56 சதவீதமானோர் சிறுவர்கள் மீது கோபப்படும் நிலை காணப்படுவதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக, தந்தையர்களின் குழந்தைப் பராமரிப்புப் பங்களிப்பு குறைவாக இருப்பதும் கவலைக்குரிய விடயமாக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
குழந்தைகளைப் பராமரிப்பது தாயின் பொறுப்பு என்ற நிலைப்பாடு சமூகத்தில் காணப்படுவதாகவும், ஆய்வின்படி 53 சதவீதமான தந்தையர்களே தமது குழந்தைகளுடன் நெருக்கமாகச் செயல்படுவதாகவும் சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
முன்பள்ளிப் பருவத்திலேயே சிறுவர்களின் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை உருவாக்குவதற்கும், பெற்றோர் மற்றும் பராமரிப்பாளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் சுகாதார அமைச்சின் புதிய திட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்பள்ளி சிறுவர்களின் டிஜிட்டல் திரைப் பயன்பாடு அதிகரிப்பு – சுகாதார அமைச்சு எச்சரிக்கை இலங்கையில் முன்பள்ளி வயதிலுள்ள சிறுவர்களின் டிஜிட்டல் திரைப் பயன்பாடு (Screen Time) கணிசமாக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் மூலம், முன்பள்ளி வயதிலுள்ள சிறுவர்களில் 64 சதவீதமானோர் தினமும் 30 நிமிடங்களுக்கும் அதிகமான நேரத்தை கைபேசி, கணினி அல்லது டெப் போன்ற டிஜிட்டல் சாதனங்களைப் பயன்படுத்துவதில் செலவிடுவதாகக் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரைகளின்படி, சிறுவர்கள் தினமும் 30 நிமிடங்களுக்கும் குறைவான நேரமே டிஜிட்டல் திரைகளைப் பயன்படுத்த வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இந்த நிலைமையை கருத்திற்கொண்டு, முன்பள்ளிச் சிறுவர்களுக்கான சுகாதார மேம்பாட்டுத் திட்டமொன்றையும் வழிகாட்டித் தொடரொன்றையும் அறிமுகப்படுத்த சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.இது தொடர்பில் தெளிவுபடுத்துவதற்காக சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க, சிறுவர்களின் திரைப் பயன்பாடு மாத்திரமன்றி அவர்களின் உறக்கம், உணவுப் பழக்கம் மற்றும் பல் சுகாதாரம் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.ஆய்வில், 32 சதவீதமான சிறுவர்கள் தினமும் 10 முதல் 11 மணித்தியாலங்களுக்கும் குறைவாகவே உறங்குவதாகக் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.அத்துடன், சுமார் 43 சதவீதமான சிறுவர்கள் உணவு உண்ணும்போது டிஜிட்டல் திரைகளைப் பார்த்துக்கொண்டே உணவருந்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.திரையைப் பார்த்துக்கொண்டு உணவருந்தும்போது, சிறுவர்கள் உணவில் போதிய கவனம் செலுத்தாத நிலை ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இதேவேளை, சுமார் 80 சதவீதமான சிறுவர்களே தினமும் இரு தடவைகள் பல் துலக்குவதாகவும் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.மேலும், சிறுவர்களைப் பராமரிக்கும் பெற்றோர் அல்லது முன்பள்ளி ஆசிரியர்களில் சுமார் 56 சதவீதமானோர் சிறுவர்கள் மீது கோபப்படும் நிலை காணப்படுவதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.குறிப்பாக, தந்தையர்களின் குழந்தைப் பராமரிப்புப் பங்களிப்பு குறைவாக இருப்பதும் கவலைக்குரிய விடயமாக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.குழந்தைகளைப் பராமரிப்பது தாயின் பொறுப்பு என்ற நிலைப்பாடு சமூகத்தில் காணப்படுவதாகவும், ஆய்வின்படி 53 சதவீதமான தந்தையர்களே தமது குழந்தைகளுடன் நெருக்கமாகச் செயல்படுவதாகவும் சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.முன்பள்ளிப் பருவத்திலேயே சிறுவர்களின் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை உருவாக்குவதற்கும், பெற்றோர் மற்றும் பராமரிப்பாளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் சுகாதார அமைச்சின் புதிய திட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.