• Apr 15 2026

பதுளை மாவட்டத்தில் சிறுவயது கர்ப்பங்கள் அதிகரிப்பு - அமைச்சர் அதிர்ச்சி தகவல்

Chithra / Feb 8th 2026, 9:02 am
image

 

பதுளை மாவட்டத்தில் இளம் வயதில் கர்ப்பமடையும் யுவதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.


இதற்கமைய குறித்த நிலைமைகளை எதிர்கொள்பவர்களுக்குப் பாதுகாப்பு வழங்க முறையான இடவசதிகள் இல்லை என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.


அத்துடன், பதுளை மாவட்டத்தில் இணையவழி வன்முறைகள் அதிகரித்துள்ளதோடு, பெற்றோர்களால் பிள்ளைகள் தாக்கப்படும் சம்பவங்களும் அதிகமாக பதிவாகியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


எவ்வாறாயினும், இலங்கையில் அதிகளவான சிறுவர் தொடர்புடைய குற்றங்கள் பொலன்னறுவையின் வெலிக்கந்தை பகுதியில் இடம்பெறுவதாக அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் கூறியுள்ளார்.

பதுளை மாவட்டத்தில் சிறுவயது கர்ப்பங்கள் அதிகரிப்பு - அமைச்சர் அதிர்ச்சி தகவல்  பதுளை மாவட்டத்தில் இளம் வயதில் கர்ப்பமடையும் யுவதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.இதற்கமைய குறித்த நிலைமைகளை எதிர்கொள்பவர்களுக்குப் பாதுகாப்பு வழங்க முறையான இடவசதிகள் இல்லை என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.அத்துடன், பதுளை மாவட்டத்தில் இணையவழி வன்முறைகள் அதிகரித்துள்ளதோடு, பெற்றோர்களால் பிள்ளைகள் தாக்கப்படும் சம்பவங்களும் அதிகமாக பதிவாகியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.எவ்வாறாயினும், இலங்கையில் அதிகளவான சிறுவர் தொடர்புடைய குற்றங்கள் பொலன்னறுவையின் வெலிக்கந்தை பகுதியில் இடம்பெறுவதாக அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement