• Jul 04 2025

இலங்கையில் விபத்துகளில் சிக்கும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு - வைத்தியர் விடுத்த எச்சரிக்கை

Chithra / Jul 3rd 2025, 9:06 am
image


விபத்துகளில் சிக்கும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையின் சிறுவர் வைத்தியரான பேராசிரியர் ருவந்தி பெரேரா தெரிவித்தார். 

தேசிய விபத்து தடுப்பு வாரத்தை முன்னிட்டு சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டார்.

நம் நாட்டில் உள்ள தரவுகளைப் பார்க்கும்போது, ​​விபத்துகளால் சிறுவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.  

இவற்றில் பெரும்பாலான விபத்துக்கள் அறியாமை மற்றும் சோதனை செய்து பார்ப்பதன் ஊடாக இடம்பெறுவதாக அவர் தெரிவித்தார். 

விபத்துகள் பல வடிவங்களில் வருகின்றன. 2 முதல் 3 வயது வரையிலான அறியாமையால் ஏற்படும் விபத்துகள். 

அடுத்ததாக, 12-14 வயதுடையவர்கள் இளமைப் பருவத்தில் நுழையும் போது மேற்கொள்ளும் சோதனை நடவடிக்கைகளால் ஏற்படும் ஆபத்துகள். 

விழுதல், சுளுக்கு மற்றும் தீக்காயங்கள் ஆகியவை சிறுவர்கள் எதிர்கொள்ளும் மிகவும் பொதுவான விபத்துகளில் அடங்கும். 

விபத்துகளைத் தடுப்பதற்காக சிறுவர்களுக்கு அறிவுறுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் பேராசிரியர்  சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் விபத்துகளில் சிக்கும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு - வைத்தியர் விடுத்த எச்சரிக்கை விபத்துகளில் சிக்கும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையின் சிறுவர் வைத்தியரான பேராசிரியர் ருவந்தி பெரேரா தெரிவித்தார். தேசிய விபத்து தடுப்பு வாரத்தை முன்னிட்டு சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டார்.நம் நாட்டில் உள்ள தரவுகளைப் பார்க்கும்போது, ​​விபத்துகளால் சிறுவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.  இவற்றில் பெரும்பாலான விபத்துக்கள் அறியாமை மற்றும் சோதனை செய்து பார்ப்பதன் ஊடாக இடம்பெறுவதாக அவர் தெரிவித்தார். விபத்துகள் பல வடிவங்களில் வருகின்றன. 2 முதல் 3 வயது வரையிலான அறியாமையால் ஏற்படும் விபத்துகள். அடுத்ததாக, 12-14 வயதுடையவர்கள் இளமைப் பருவத்தில் நுழையும் போது மேற்கொள்ளும் சோதனை நடவடிக்கைகளால் ஏற்படும் ஆபத்துகள். விழுதல், சுளுக்கு மற்றும் தீக்காயங்கள் ஆகியவை சிறுவர்கள் எதிர்கொள்ளும் மிகவும் பொதுவான விபத்துகளில் அடங்கும். விபத்துகளைத் தடுப்பதற்காக சிறுவர்களுக்கு அறிவுறுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் பேராசிரியர்  சுட்டிக்காட்டினார்.

Advertisement

Advertisement

Advertisement