• May 20 2026

புற்றுநோயிலிருந்து தப்பிப் பிழைக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு - அமைச்சர் நளிந்த சுட்டிக்காட்டு

Chithra / May 19th 2026, 8:37 pm
image


ஆரம்பத்திலேயே புற்றுநோயைக் கண்டறிதல், சிகிச்சை மற்றும் பராமரிப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் காரணமாக, உலகளவில் புற்றுநோயிலிருந்து தப்பிப் பிழைக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது ஒரு மாபெரும் உலகளாவிய சாதனையாகும் என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார்.


உலக சுகாதார அமைப்பின் 79 ஆவது உலக சுகாதாரப் பேரவைக் கூட்டத்தொடர் நேற்று (18) சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் உள்ள உலக சுகாதார அமைப்பின் தலைமையகத்தில் ஆரம்பமானது.


உலக சுகாதார அமைப்பின் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய பிராந்தியக் கூட்டத்தொடரின் தலைவர் என்ற ரீதியிலும், இலங்கையின் சுகாதார அமைச்சர் என்ற ரீதியிலும் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ இந்த வருட பேரவையில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.


இதற்கமைய, சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ இன்று (19) 79 ஆவது உலக சுகாதாரப் பேரவையில் உரையாற்றினார்.


உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குனர் வைத்தியர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் உலக சுகாதாரப் பேரவையை அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்து வைத்ததுடன், இந்த நிகழ்வில் 194 உறுப்பு நாடுகளின் சுகாதார அமைச்சர்கள், ராஜதந்திரிகள் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினர் கலந்துகொண்டுள்ளனர்.


இந்த வருட பேரவையின் கருப்பொருள் "One world for Health"  என்பதாகும்.


இந்தக் கருப்பொருளின் கீழ், உலகளாவிய சுகாதார சவால்கள், தொற்றுநோய்களுக்கான தயார்நிலை மற்றும் உலகளாவிய சுகாதாரக் காப்பீடு குறித்த பல விவாதங்கள், பயிலரங்குகள், அமர்வுகள் மற்றும் விரிவுரைகள் நடத்தப்படவுள்ளன.


அமர்வில் உரையாற்றிய அமைச்சர்,


ஆரம்பத்திலேயே புற்றுநோயைக் கண்டறிதல், சிகிச்சை மற்றும் பராமரிப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் காரணமாக, உலகளவில் புற்றுநோயிலிருந்து தப்பிப் பிழைக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது ஒரு மாபெரும் உலகளாவிய சாதனையாகும் என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார்.


 குழந்தைப் பருவப் புற்றுநோயில் வெற்றியின் உண்மையான அளவுகோல் என்பது எத்தனை குழந்தைகள் உயிர் பிழைக்கின்றன என்பதில் மட்டுமல்ல, அவர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதில்தான் உள்ளது என்றும், புற்றுநோயை வென்ற ஒவ்வொரு குழந்தைக்கும் ஆரோக்கியமான, கண்ணியமான, நிறைவான வாழ்க்கையை வாழ்வதற்கான வாய்ப்பை வழங்குவது அனைவரின் கூட்டுப் பொறுப்பாகும் என்றும் தெரிவித்தார். 


குழந்தைப்பருவப் புற்றுநோயிலிருந்து மீண்ட குழந்தைகளுக்கான வாழ்நாள் முழுவதற்குமான பராமரிப்பு சேவைகளை வலுப்படுத்துவதில் இலங்கை உறுதியாக உள்ளது என்றும், உலக சுகாதார அமைப்பு, சர்வதேசப் பங்காளிகள், சுகாதார வல்லுநர்கள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் நோயிலிருந்து மீண்டவர்களுடன் சிறப்பாக பணியாற்றி வருகிறது என்றும், மேலும், "அனைவருக்கும் இலவச சுகாதார சேவைகளை வழங்கும் கொள்கையின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ள இலங்கையின் தேசிய சுகாதார அமைப்பானது, புற்றுநோயைக் கண்டறிதல், சிகிச்சை, பராமரிப்பு, மறுவாழ்வு மற்றும் உளவியல் சமூக ஆதரவு ஆகியவற்றுக்கான சேவைகளை சமமாக முன்னெடுப்பதற்கு ஒரு வலுவான அடித்தளத்தை வழங்குகிறது" என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.


குழந்தைப் பருவப் புற்றுநோயிலிருந்து மீண்ட குழந்தைகளுக்கான பராமரிப்பு, மருத்துவமனைகளுக்குள் மட்டும் முடங்கிவிடாமல், ஆரம்ப சுகாதார சேவைகள், பள்ளிகள், குடும்பங்கள் மற்றும் சமூகங்களை உள்ளடக்கிய ஒரு தொடர்ச்சியான பராமரிப்பின் பகுதியாக இருக்க வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.


புற்றுநோயிலிருந்து தப்பிப் பிழைக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு - அமைச்சர் நளிந்த சுட்டிக்காட்டு ஆரம்பத்திலேயே புற்றுநோயைக் கண்டறிதல், சிகிச்சை மற்றும் பராமரிப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் காரணமாக, உலகளவில் புற்றுநோயிலிருந்து தப்பிப் பிழைக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது ஒரு மாபெரும் உலகளாவிய சாதனையாகும் என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார்.உலக சுகாதார அமைப்பின் 79 ஆவது உலக சுகாதாரப் பேரவைக் கூட்டத்தொடர் நேற்று (18) சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் உள்ள உலக சுகாதார அமைப்பின் தலைமையகத்தில் ஆரம்பமானது.உலக சுகாதார அமைப்பின் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய பிராந்தியக் கூட்டத்தொடரின் தலைவர் என்ற ரீதியிலும், இலங்கையின் சுகாதார அமைச்சர் என்ற ரீதியிலும் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ இந்த வருட பேரவையில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.இதற்கமைய, சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ இன்று (19) 79 ஆவது உலக சுகாதாரப் பேரவையில் உரையாற்றினார்.உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குனர் வைத்தியர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் உலக சுகாதாரப் பேரவையை அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்து வைத்ததுடன், இந்த நிகழ்வில் 194 உறுப்பு நாடுகளின் சுகாதார அமைச்சர்கள், ராஜதந்திரிகள் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினர் கலந்துகொண்டுள்ளனர்.இந்த வருட பேரவையின் கருப்பொருள் "One world for Health"  என்பதாகும்.இந்தக் கருப்பொருளின் கீழ், உலகளாவிய சுகாதார சவால்கள், தொற்றுநோய்களுக்கான தயார்நிலை மற்றும் உலகளாவிய சுகாதாரக் காப்பீடு குறித்த பல விவாதங்கள், பயிலரங்குகள், அமர்வுகள் மற்றும் விரிவுரைகள் நடத்தப்படவுள்ளன.அமர்வில் உரையாற்றிய அமைச்சர்,ஆரம்பத்திலேயே புற்றுநோயைக் கண்டறிதல், சிகிச்சை மற்றும் பராமரிப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் காரணமாக, உலகளவில் புற்றுநோயிலிருந்து தப்பிப் பிழைக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது ஒரு மாபெரும் உலகளாவிய சாதனையாகும் என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார். குழந்தைப் பருவப் புற்றுநோயில் வெற்றியின் உண்மையான அளவுகோல் என்பது எத்தனை குழந்தைகள் உயிர் பிழைக்கின்றன என்பதில் மட்டுமல்ல, அவர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதில்தான் உள்ளது என்றும், புற்றுநோயை வென்ற ஒவ்வொரு குழந்தைக்கும் ஆரோக்கியமான, கண்ணியமான, நிறைவான வாழ்க்கையை வாழ்வதற்கான வாய்ப்பை வழங்குவது அனைவரின் கூட்டுப் பொறுப்பாகும் என்றும் தெரிவித்தார். குழந்தைப்பருவப் புற்றுநோயிலிருந்து மீண்ட குழந்தைகளுக்கான வாழ்நாள் முழுவதற்குமான பராமரிப்பு சேவைகளை வலுப்படுத்துவதில் இலங்கை உறுதியாக உள்ளது என்றும், உலக சுகாதார அமைப்பு, சர்வதேசப் பங்காளிகள், சுகாதார வல்லுநர்கள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் நோயிலிருந்து மீண்டவர்களுடன் சிறப்பாக பணியாற்றி வருகிறது என்றும், மேலும், "அனைவருக்கும் இலவச சுகாதார சேவைகளை வழங்கும் கொள்கையின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ள இலங்கையின் தேசிய சுகாதார அமைப்பானது, புற்றுநோயைக் கண்டறிதல், சிகிச்சை, பராமரிப்பு, மறுவாழ்வு மற்றும் உளவியல் சமூக ஆதரவு ஆகியவற்றுக்கான சேவைகளை சமமாக முன்னெடுப்பதற்கு ஒரு வலுவான அடித்தளத்தை வழங்குகிறது" என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.குழந்தைப் பருவப் புற்றுநோயிலிருந்து மீண்ட குழந்தைகளுக்கான பராமரிப்பு, மருத்துவமனைகளுக்குள் மட்டும் முடங்கிவிடாமல், ஆரம்ப சுகாதார சேவைகள், பள்ளிகள், குடும்பங்கள் மற்றும் சமூகங்களை உள்ளடக்கிய ஒரு தொடர்ச்சியான பராமரிப்பின் பகுதியாக இருக்க வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement