• May 09 2026

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட தொழிலதிபர்களுக்கு நிதிச் சலுகை அதிகரிப்பு

Chithra / Dec 30th 2025, 7:31 pm
image


நாட்டில் வியாபாரத் துறையை துரிதமாக மீள்நிலைக்குக் கொண்டு வருவதற்காக அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள தொழில் முயற்சியாளர்களுக்கு வழங்கப்படும் நிதிச் சலுகையை அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதற்கமைய அனர்த்த நிலைமையால் பாதிக்கப்பட்டுள்ள நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களை மீள்நிலைக்குக் கொண்டு வருவதற்காக 'RE—MSME – அனர்த்த சலுகை' கடன் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 2025.12.10 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அனர்த்த நிலைமையால் பாதிக்கப்பட்டுள்ள தொழில் முயற்சியாளர்களுக்கு ஆறுமாத கால சலுகைக் காலத்துடன் கூடிய மூன்று ஆண்டுகள் மீள்செலுத்தும் தவணைக் காலத்துக்கு நுண் தொழில் முயற்சியாளர்களுக்கு உயர்ந்தபட்சம் 250,000 ரூபாய் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களுக்கு உயர்ந்தபட்சம்  1 மில்லியன் ரூபா வரை 3மூ சதவீத வருடாந்த வட்டிவீதத்தில் இலங்கை வங்கி, மக்கள் வங்கி மற்றும் பிரதேச அபிவிருத்தி வங்கி ஆகிய வங்கிகள் மூலம் செயற்பாட்டு மூலதனத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இக்கடன் திட்டத்தை அமுல்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அனர்த்த நிலைமையால் பாதிக்கப்பட்டுள்ள பாரியளவிலான தொழில் முயற்சியாளர்கள் உள்ளிட்ட அனைத்து தொழில் முயற்சியாளர்களுக்கும் அனுகூலங்களை வழங்கக்கூடிய வகையில் தனியார் வங்கிகளின் பங்களிப்புடன் இக்கடன் திட்டத்தை மேலும் விரிவாக்கம் செய்ய வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கமைய, அனர்த்த நிலைமையால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து தொழில் முயற்சியாளர்களுக்கும் 06 மாதகால சலுகைக் காலத்துடன் கூடிய 3 ஆண்டுகள் மீள்செலுத்தல் தவணை முறையில் நுண் தொழில் முயற்சியாளர்களுக்கு உயர்ந்தபட்சம் 250,000 ரூபாய் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களுக்கு உயர்ந்தபட்சம்  1 மில்லியன் ரூபா வரைக்கும்,  நடுத்தர மற்றும் பாரிய அளவிலான தொழில் முயற்சியாளர்களுக்கு உயர்ந்தபட்சம் 25 மில்லியன் ரூபா வரை 3மூ சதவீத வருடாந்த வட்டிவீதத்தில் அனுமதிபெற்ற வணிக வங்கிககள் மற்றும் அனுமதிபெற்ற விசேட வங்கிகள் மூலம் செயற்பாட்டு மூலதனக் கடன் வசதிகளைப் பெற்றுக் கொள்ளக்கூடிய வகையில் 'விரிவான அனர்த்த சலுகைக் கடன் திட்டம்' எனும் பெயரிலான உத்தேச கடன் திட்டமொன்று திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்காக 5 பில்லியன் ரூபா நிதியொதுக்கீடு செய்வதற்கும் எதிர்பார்;க்கப்படுகின்றது. குறித்த கடன் திட்டத்தை அமுல்படுத்துவதற்காக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட தொழிலதிபர்களுக்கு நிதிச் சலுகை அதிகரிப்பு நாட்டில் வியாபாரத் துறையை துரிதமாக மீள்நிலைக்குக் கொண்டு வருவதற்காக அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள தொழில் முயற்சியாளர்களுக்கு வழங்கப்படும் நிதிச் சலுகையை அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.அதற்கமைய அனர்த்த நிலைமையால் பாதிக்கப்பட்டுள்ள நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களை மீள்நிலைக்குக் கொண்டு வருவதற்காக 'RE—MSME – அனர்த்த சலுகை' கடன் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 2025.12.10 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.அனர்த்த நிலைமையால் பாதிக்கப்பட்டுள்ள தொழில் முயற்சியாளர்களுக்கு ஆறுமாத கால சலுகைக் காலத்துடன் கூடிய மூன்று ஆண்டுகள் மீள்செலுத்தும் தவணைக் காலத்துக்கு நுண் தொழில் முயற்சியாளர்களுக்கு உயர்ந்தபட்சம் 250,000 ரூபாய் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களுக்கு உயர்ந்தபட்சம்  1 மில்லியன் ரூபா வரை 3மூ சதவீத வருடாந்த வட்டிவீதத்தில் இலங்கை வங்கி, மக்கள் வங்கி மற்றும் பிரதேச அபிவிருத்தி வங்கி ஆகிய வங்கிகள் மூலம் செயற்பாட்டு மூலதனத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இக்கடன் திட்டத்தை அமுல்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.அனர்த்த நிலைமையால் பாதிக்கப்பட்டுள்ள பாரியளவிலான தொழில் முயற்சியாளர்கள் உள்ளிட்ட அனைத்து தொழில் முயற்சியாளர்களுக்கும் அனுகூலங்களை வழங்கக்கூடிய வகையில் தனியார் வங்கிகளின் பங்களிப்புடன் இக்கடன் திட்டத்தை மேலும் விரிவாக்கம் செய்ய வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது.அதற்கமைய, அனர்த்த நிலைமையால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து தொழில் முயற்சியாளர்களுக்கும் 06 மாதகால சலுகைக் காலத்துடன் கூடிய 3 ஆண்டுகள் மீள்செலுத்தல் தவணை முறையில் நுண் தொழில் முயற்சியாளர்களுக்கு உயர்ந்தபட்சம் 250,000 ரூபாய் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களுக்கு உயர்ந்தபட்சம்  1 மில்லியன் ரூபா வரைக்கும்,  நடுத்தர மற்றும் பாரிய அளவிலான தொழில் முயற்சியாளர்களுக்கு உயர்ந்தபட்சம் 25 மில்லியன் ரூபா வரை 3மூ சதவீத வருடாந்த வட்டிவீதத்தில் அனுமதிபெற்ற வணிக வங்கிககள் மற்றும் அனுமதிபெற்ற விசேட வங்கிகள் மூலம் செயற்பாட்டு மூலதனக் கடன் வசதிகளைப் பெற்றுக் கொள்ளக்கூடிய வகையில் 'விரிவான அனர்த்த சலுகைக் கடன் திட்டம்' எனும் பெயரிலான உத்தேச கடன் திட்டமொன்று திட்டமிடப்பட்டுள்ளது.அதற்காக 5 பில்லியன் ரூபா நிதியொதுக்கீடு செய்வதற்கும் எதிர்பார்;க்கப்படுகின்றது. குறித்த கடன் திட்டத்தை அமுல்படுத்துவதற்காக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement