• Dec 25 2024

கிளிநொச்சியில் அதிகரித்த மதுபானக் கடைகள்; நிரந்தரமாக மூடுமாறு வலியுறுத்தி போராட்டம்

Chithra / Dec 24th 2024, 11:59 am
image

  

கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகரித்த மதுபான கடைகளை நிரந்தரமாக மூடுமாறு வலியுறுத்தி போராட்டம் ஒன்று இன்று காலை இடம்பெற்றது.

குறித்த ஆர்ப்பாட்டப் பேரணி கிளிநொச்சி டிப்போ சந்தியில் ஆரம்பமாகி மாவட்ட செயலகம் வரை முன்னெடுக்கப்பட்டது. 

மதுபோதைக்கு எதிரான இயக்கம் மற்றும் வடக்கு, கிழக்கு மறுவாழ்வு அமைப்பின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டத்தில் சர்வ மதத்தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

இதன்போது, கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ். முரளீதரனிடம் ஜனாதிபதிக்கு கையளிக்குமாறு மகஜர் ஒன்றும் கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


கிளிநொச்சியில் அதிகரித்த மதுபானக் கடைகள்; நிரந்தரமாக மூடுமாறு வலியுறுத்தி போராட்டம்   கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகரித்த மதுபான கடைகளை நிரந்தரமாக மூடுமாறு வலியுறுத்தி போராட்டம் ஒன்று இன்று காலை இடம்பெற்றது.குறித்த ஆர்ப்பாட்டப் பேரணி கிளிநொச்சி டிப்போ சந்தியில் ஆரம்பமாகி மாவட்ட செயலகம் வரை முன்னெடுக்கப்பட்டது. மதுபோதைக்கு எதிரான இயக்கம் மற்றும் வடக்கு, கிழக்கு மறுவாழ்வு அமைப்பின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.குறித்த போராட்டத்தில் சர்வ மதத்தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதன்போது, கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ். முரளீதரனிடம் ஜனாதிபதிக்கு கையளிக்குமாறு மகஜர் ஒன்றும் கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement