• Nov 22 2024

அதிக ஞாபகத் திறன்; திருமலையில் சோழன் உலக சாதனை படைத்த சிறுமி

Chithra / Oct 13th 2024, 11:06 am
image

 

பிரேம்ராஜ் மற்றும் வைதேகி தம்பதியரின் 3 வருடங்களும் 11 மாதங்களுமான மகள் தாரா சிறுவயதில்  இருந்தே அதிக ஞாபகத் திறனுடன் இருப்பதைக் அவரது பெற்றோர் அவதானித்துள்ளனர். 

சிறுமியின் பெற்றோர் தொடர் பயிற்சியளித்ததன் விளைவாக நேற்று திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரியில், சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் நடுவர்கள் முன்னிலையில் 02 முதல் 07 வரையான பெருக்கல் வாய்ப்பாடுகள், தனிம வரிசை அட்டவணையின் 50 கூறுகள், மனித உடல்  உறுப்புகள் 6 இன் உட்பாகங்கள் போன்றவற்றை கூறிய அதேவேளை 100  சமூக ஊடகங்களின் சின்னங்களையும் பிழையின்றி அடையாளம் காட்டினார். 

இவரது முயற்சியை முறைப்படி கண்காணித்து பரிசோதித்த சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் திருகோணமலை மாவட்டத் தலைவர் எம்.தனராஜ், மட்டக்களப்பு மாவட்டத் தலைவர் கதிரவன் த. இன்பராசா, திருகோணமலை மாவட்டப் பொதுச் செயலாளர் சுயன்தன் விக்னேஷ்வர ராஜா மற்றும் மட்டக்களப்பு மாவட்டப் பொதுச் செயலாளர் சிவ வரதகரன் போன்றோர் சிறுமியின் முயற்சியை உலக சாதனையாக பதிவு செய்தனர்.

சோழன் உலக சாதனை படைத்த சிறுமி பிரேம் ராஜ் தாராவிற்கு சட்டகம் செய்யப்பட்ட சான்றிதழ், நினைவுக் கேடயம், தங்கப் பதக்கம்,அடையாள அட்டை மற்றும் பைல் போன்றவை சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் நடுவர்கள்,  மற்றும் சிறப்பு விருந்தினர்களினால் வழங்கிப் பாராட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது


அதிக ஞாபகத் திறன்; திருமலையில் சோழன் உலக சாதனை படைத்த சிறுமி  பிரேம்ராஜ் மற்றும் வைதேகி தம்பதியரின் 3 வருடங்களும் 11 மாதங்களுமான மகள் தாரா சிறுவயதில்  இருந்தே அதிக ஞாபகத் திறனுடன் இருப்பதைக் அவரது பெற்றோர் அவதானித்துள்ளனர். சிறுமியின் பெற்றோர் தொடர் பயிற்சியளித்ததன் விளைவாக நேற்று திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரியில், சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் நடுவர்கள் முன்னிலையில் 02 முதல் 07 வரையான பெருக்கல் வாய்ப்பாடுகள், தனிம வரிசை அட்டவணையின் 50 கூறுகள், மனித உடல்  உறுப்புகள் 6 இன் உட்பாகங்கள் போன்றவற்றை கூறிய அதேவேளை 100  சமூக ஊடகங்களின் சின்னங்களையும் பிழையின்றி அடையாளம் காட்டினார். இவரது முயற்சியை முறைப்படி கண்காணித்து பரிசோதித்த சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் திருகோணமலை மாவட்டத் தலைவர் எம்.தனராஜ், மட்டக்களப்பு மாவட்டத் தலைவர் கதிரவன் த. இன்பராசா, திருகோணமலை மாவட்டப் பொதுச் செயலாளர் சுயன்தன் விக்னேஷ்வர ராஜா மற்றும் மட்டக்களப்பு மாவட்டப் பொதுச் செயலாளர் சிவ வரதகரன் போன்றோர் சிறுமியின் முயற்சியை உலக சாதனையாக பதிவு செய்தனர்.சோழன் உலக சாதனை படைத்த சிறுமி பிரேம் ராஜ் தாராவிற்கு சட்டகம் செய்யப்பட்ட சான்றிதழ், நினைவுக் கேடயம், தங்கப் பதக்கம்,அடையாள அட்டை மற்றும் பைல் போன்றவை சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் நடுவர்கள்,  மற்றும் சிறப்பு விருந்தினர்களினால் வழங்கிப் பாராட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement

Advertisement