• Nov 23 2024

கடல் பிராந்தியங்களில் அதிகரிக்கும் காற்றின் வேகம்; நாட்டில் இன்றும் இடியுடன் கூடிய மழை

Chithra / Aug 9th 2024, 7:50 am
image


சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும்  அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

வளிமண்டலவியல் திணைக்களம்  இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல  இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

புத்தளம் தொடக்கம் கொழும்பு ஊடாக காலி  வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை பெய்யக்கூடும். 

நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் குறிப்பாக பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 - 40 கிலோமீற்றர் வேகத்தில் மேற்குத் திசையில் இருந்து தென்மேற்குத் திசையை நோக்கி காற்று வீசும். 

மன்னார் தொடக்கம் புத்தளம், கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான  வரையான கடல் பிராந்தியங்களில்  மணித்தியாலத்திற்கு 50 - 55 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும் இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும். என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடல் பிராந்தியங்களில் அதிகரிக்கும் காற்றின் வேகம்; நாட்டில் இன்றும் இடியுடன் கூடிய மழை சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும்  அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வளிமண்டலவியல் திணைக்களம்  இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல  இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.புத்தளம் தொடக்கம் கொழும்பு ஊடாக காலி  வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை பெய்யக்கூடும். நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் குறிப்பாக பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 - 40 கிலோமீற்றர் வேகத்தில் மேற்குத் திசையில் இருந்து தென்மேற்குத் திசையை நோக்கி காற்று வீசும். மன்னார் தொடக்கம் புத்தளம், கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான  வரையான கடல் பிராந்தியங்களில்  மணித்தியாலத்திற்கு 50 - 55 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும் இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும். என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement