திருகோணமலையில் அமைந்துள்ள சர்வதேச பாடசாலையான க்ரீன்விச் பாடசாலையானது இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 77 ஆவது சுதந்திர தின நிகழ்வை நேற்றையதினம்(04) கொண்டாடியது.
இதன்போது ஆசிரியர்களும் மாணவர்களும் இணைந்து இலங்கையின் வரைபடத்தை மிகவும் துல்லியமாகவும் பிரம்மாண்டாகவும் காட்சிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமின்றி இத்தினத்தை கொண்டாடும் விதமாக வீதியில் சென்ற வாகனங்களுக்கு இலங்கையின் தேசிய கொடியை ஒட்டி தங்களின் தேசப்பற்றை வெளிக்காட்டியமை மிகவும் வரவேற்கத்தக்க விடயமாக காணப்பட்டது.
இந்நிகழ்வில் பாடசாலை அதிபர், உப அதிபர் , ஆசிரியர்கள் உட்பட மாணவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
திருமலை சர்வதேச பாடசாலையின் சுதந்திர தின நிகழ்வுகள். திருகோணமலையில் அமைந்துள்ள சர்வதேச பாடசாலையான க்ரீன்விச் பாடசாலையானது இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 77 ஆவது சுதந்திர தின நிகழ்வை நேற்றையதினம்(04) கொண்டாடியது.இதன்போது ஆசிரியர்களும் மாணவர்களும் இணைந்து இலங்கையின் வரைபடத்தை மிகவும் துல்லியமாகவும் பிரம்மாண்டாகவும் காட்சிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி இத்தினத்தை கொண்டாடும் விதமாக வீதியில் சென்ற வாகனங்களுக்கு இலங்கையின் தேசிய கொடியை ஒட்டி தங்களின் தேசப்பற்றை வெளிக்காட்டியமை மிகவும் வரவேற்கத்தக்க விடயமாக காணப்பட்டது.இந்நிகழ்வில் பாடசாலை அதிபர், உப அதிபர் , ஆசிரியர்கள் உட்பட மாணவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.