இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இன்று (03) சம்பூர் பகுதிக்கு விஜயமொன்றை மேற்கொண்டார்.
இதன்போது சம்பூரில் அமைக்கப்படவுள்ள காற்றாலை மின்சார உற்பத்தி திட்டத்திற்கான இடத்தை பார்வையிட்டு கலந்துரையாடினார்.
அதேவேளை, இந்திய அரசாங்கத்தின் NTPC நிறுவனம், இலங்கை மின்சார சபையோடு இணைந்து சம்பூரில் இவ் காற்றாலை மின்சார உற்பத்தி திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ள நிலையிலே அவரது விஜயம் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன் பின்னர் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் கருத்து தெரிவிக்கையில்
இந்திய NTPC நிறுவனம் இலங்கை மின்சார சபையோடு இணைந்து நடைமுறைப்படுத்தவுள்ள 50 மெகா வோட்ஸ் திட்டமானது நீண்ட கால திட்டமாகும். இது தொடர்பில் இரண்டு அரசாங்கங்களும் பேச்சுவார்த்தை நடாத்தி வருகின்றனர்.
இத்திட்டத்தின் மூலம் இலங்கை மக்கள் நன்மையடையவுள்ளதாகவும் சந்தோஷ் ஜா தெரிவித்தார்.
இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா சம்பூர் பகுதிக்கு திடீர் விஜயம். இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இன்று (03) சம்பூர் பகுதிக்கு விஜயமொன்றை மேற்கொண்டார். இதன்போது சம்பூரில் அமைக்கப்படவுள்ள காற்றாலை மின்சார உற்பத்தி திட்டத்திற்கான இடத்தை பார்வையிட்டு கலந்துரையாடினார்.அதேவேளை, இந்திய அரசாங்கத்தின் NTPC நிறுவனம், இலங்கை மின்சார சபையோடு இணைந்து சம்பூரில் இவ் காற்றாலை மின்சார உற்பத்தி திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ள நிலையிலே அவரது விஜயம் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.இதன் பின்னர் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் கருத்து தெரிவிக்கையில்இந்திய NTPC நிறுவனம் இலங்கை மின்சார சபையோடு இணைந்து நடைமுறைப்படுத்தவுள்ள 50 மெகா வோட்ஸ் திட்டமானது நீண்ட கால திட்டமாகும். இது தொடர்பில் இரண்டு அரசாங்கங்களும் பேச்சுவார்த்தை நடாத்தி வருகின்றனர்.இத்திட்டத்தின் மூலம் இலங்கை மக்கள் நன்மையடையவுள்ளதாகவும் சந்தோஷ் ஜா தெரிவித்தார்.