சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்திற்கு வழக்கு விசாரணைக்காக வருகை தந்த இந்தியப் பிரஜைகள் தவறவிட்ட சுமார் 31 இலட்சம் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான அமெரிக்க டொலர் பணத்தை திருடியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் இரு பெண்கள் சம்மாந்துறைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு ஒன்றிற்காக தமிழ்நாட்டைச் சேர்ந்த இரு இந்தியப் பிரஜைகள் நேற்று (24) நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளனர்.
வழக்கு விசாரணையின்போது நீதவான் கோரிய சான்றாதாரத்தை காண்பிப்பதற்காக நீதிமன்றத்திற்குள் செல்வதற்கு முன்னர், தமது கைத்தொலைபேசிகளை ஒப்படைத்து வைத்திருந்த இடத்திற்கு அவர்களில் ஒருவர் சென்றுள்ளார்.
அங்கு தனது கைத்தொலைபேசியைப் பெற்றுக்கொண்ட பின்னர், கையில் வைத்திருந்த சுமார் 31 இலட்சம் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான அமெரிக்க டொலர்களை உள்ளடக்கிய கடித உறையை அங்கேயே தவறுதலாக வைத்துவிட்டு நீதிமன்றத்திற்குள் சென்றுள்ளார்.
வழக்கு விசாரணை நிறைவடைந்த பின்னர் குறித்த பணம் அடங்கிய கடித உறை ஞாபகத்திற்கு வந்ததையடுத்து, அவர் உடனடியாக கைத்தொலைபேசியைப் பெற்ற இடத்திற்குச் சென்று தேடியுள்ளார். எனினும், அங்கு பணம் அடங்கிய கடித உறை காணப்படவில்லை.
இதனையடுத்து சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதுடன், சட்டத்தரணி ஒருவரின் உதவியுடன் சம்மாந்துறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
முறைப்பாட்டின் அடிப்படையில் உடனடியாக விசாரணைகளை முன்னெடுத்த சம்மாந்துறைப் பொலிஸார், நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய இரு பெண்களை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இரு பெண்களும் மேலதிக விசாரணைகளுக்காக சம்மாந்துறைப் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கமராக்களின் காணொளிக் காட்சிகளைப் பரிசோதித்து, காணாமல்போன பணத்தை மீட்பதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.
வழக்கிற்காக சம்மாந்துறை நீதிமன்றம் வந்த இந்தியர்களுக்கு அதிர்ச்சி - பெருந்தொகை பணம் மாயம் சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்திற்கு வழக்கு விசாரணைக்காக வருகை தந்த இந்தியப் பிரஜைகள் தவறவிட்ட சுமார் 31 இலட்சம் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான அமெரிக்க டொலர் பணத்தை திருடியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் இரு பெண்கள் சம்மாந்துறைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு ஒன்றிற்காக தமிழ்நாட்டைச் சேர்ந்த இரு இந்தியப் பிரஜைகள் நேற்று (24) நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளனர்.வழக்கு விசாரணையின்போது நீதவான் கோரிய சான்றாதாரத்தை காண்பிப்பதற்காக நீதிமன்றத்திற்குள் செல்வதற்கு முன்னர், தமது கைத்தொலைபேசிகளை ஒப்படைத்து வைத்திருந்த இடத்திற்கு அவர்களில் ஒருவர் சென்றுள்ளார்.அங்கு தனது கைத்தொலைபேசியைப் பெற்றுக்கொண்ட பின்னர், கையில் வைத்திருந்த சுமார் 31 இலட்சம் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான அமெரிக்க டொலர்களை உள்ளடக்கிய கடித உறையை அங்கேயே தவறுதலாக வைத்துவிட்டு நீதிமன்றத்திற்குள் சென்றுள்ளார்.வழக்கு விசாரணை நிறைவடைந்த பின்னர் குறித்த பணம் அடங்கிய கடித உறை ஞாபகத்திற்கு வந்ததையடுத்து, அவர் உடனடியாக கைத்தொலைபேசியைப் பெற்ற இடத்திற்குச் சென்று தேடியுள்ளார். எனினும், அங்கு பணம் அடங்கிய கடித உறை காணப்படவில்லை.இதனையடுத்து சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதுடன், சட்டத்தரணி ஒருவரின் உதவியுடன் சம்மாந்துறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.முறைப்பாட்டின் அடிப்படையில் உடனடியாக விசாரணைகளை முன்னெடுத்த சம்மாந்துறைப் பொலிஸார், நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய இரு பெண்களை கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட இரு பெண்களும் மேலதிக விசாரணைகளுக்காக சம்மாந்துறைப் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.இதேவேளை, சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கமராக்களின் காணொளிக் காட்சிகளைப் பரிசோதித்து, காணாமல்போன பணத்தை மீட்பதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.