• Jan 11 2025

இந்தோனேசியா பிரிக்ஸ் அமைப்பில் இணைவு !

Tharmini / Jan 7th 2025, 11:00 am
image

பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பினராக இந்தோனேசியா இணைந்துள்ளதாக பிரேசில் அறிவித்துள்ளது

இது தொடர்பாக பிரேசில் வெளியுறவு துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “தென்கிழக்கு ஆசியாவின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடு உலகளாவிய நிர்வாகத்தின் நிறுவனங்களை சீர்திருத்தும் விருப்பத்தை மற்ற உறுப்பு நாடுகளுடன் பகிர்ந்து கொள்கிறது. மேலும், உலகளாவிய தெற்கிற்குள் ஒத்துழைப்பை வழங்கவும் சாதகமாக பங்களிக்கிறது,”

இதேவேளை 2025 ஆம் ஆண்டு பிரிக்ஸ் அமைப்பின் தலைமை ஏற்றுள்ள பிரேசில், இந்தோனேசியாவை அமைப்பில் இணைப்பது தொடர்பான முயற்சிகள் கடந்த 2023 ஆம ஆண்டு ஆரம்பமாகியதாக தெரிவித்தது.

மேலும், 2009 ஆம் ஆண்டு பிரேசில், ரஷியா, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளால் பிரிக்ஸ் அமைப்பு உருவாக்கப்பட்டது. இதற்கு அடுத்த ஆண்டு பிரிக்ஸ் அமைப்பில் தென் ஆப்பிரிக்கா இணைக்கப்பட்டது.

கடந்த ஆண்டு, பிரிக்ஸ் அமைப்பில் ஈரான், எகிப்து, எத்தியோப்பியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் முழு உறுப்பினர்களாக இணைந்தமையும் குறிப்பிடத்தக்கது

இந்தோனேசியா பிரிக்ஸ் அமைப்பில் இணைவு பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பினராக இந்தோனேசியா இணைந்துள்ளதாக பிரேசில் அறிவித்துள்ளதுஇது தொடர்பாக பிரேசில் வெளியுறவு துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “தென்கிழக்கு ஆசியாவின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடு உலகளாவிய நிர்வாகத்தின் நிறுவனங்களை சீர்திருத்தும் விருப்பத்தை மற்ற உறுப்பு நாடுகளுடன் பகிர்ந்து கொள்கிறது. மேலும், உலகளாவிய தெற்கிற்குள் ஒத்துழைப்பை வழங்கவும் சாதகமாக பங்களிக்கிறது,”இதேவேளை 2025 ஆம் ஆண்டு பிரிக்ஸ் அமைப்பின் தலைமை ஏற்றுள்ள பிரேசில், இந்தோனேசியாவை அமைப்பில் இணைப்பது தொடர்பான முயற்சிகள் கடந்த 2023 ஆம ஆண்டு ஆரம்பமாகியதாக தெரிவித்தது.மேலும், 2009 ஆம் ஆண்டு பிரேசில், ரஷியா, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளால் பிரிக்ஸ் அமைப்பு உருவாக்கப்பட்டது. இதற்கு அடுத்த ஆண்டு பிரிக்ஸ் அமைப்பில் தென் ஆப்பிரிக்கா இணைக்கப்பட்டது.கடந்த ஆண்டு, பிரிக்ஸ் அமைப்பில் ஈரான், எகிப்து, எத்தியோப்பியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் முழு உறுப்பினர்களாக இணைந்தமையும் குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement

Advertisement