மட்டக்களப்பு - வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள பால்சேனை கடற்கரையில் மியன்மார் நாட்டு படகு ஒன்று கரையொதுங்கியுள்ளது.
இப் படகு இன்று செவ்வாய்க்கிழமை (31) மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
மூங்கில்களினால் கட்டப்பட்ட இந்த படகில் மியன்மார் என ஆங்கிலத்தில் காணப்படுவதோடு, அந்நாட்டு தேசிய கொடியும் பறக்கவிடப்பட்டுள்ளதால், அந்நாட்டை சேர்ந்ததாக இருக்கலாம் என பிரதேசவாசிகள் நம்புகின்றனர்.
படகில் சமையல் பாத்திரங்களும், சில உணவு பொருட்களும் காணப்படுவதோடு, விறகு அடுப்பில் சமைத்த அடையாளங்களும் காணப்படுகின்றன.
தகவல் அறிந்த வாகரை பொலிசார் மற்றும் கடற்படை அதிகாரிகள் படகை பார்வையிட்டதோடு,
விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மட்டக்களப்பில் கரையொதுங்கிய மியன்மார் நாட்டு படகு - விசாரணை ஆரம்பம் மட்டக்களப்பு - வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள பால்சேனை கடற்கரையில் மியன்மார் நாட்டு படகு ஒன்று கரையொதுங்கியுள்ளது.இப் படகு இன்று செவ்வாய்க்கிழமை (31) மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.மூங்கில்களினால் கட்டப்பட்ட இந்த படகில் மியன்மார் என ஆங்கிலத்தில் காணப்படுவதோடு, அந்நாட்டு தேசிய கொடியும் பறக்கவிடப்பட்டுள்ளதால், அந்நாட்டை சேர்ந்ததாக இருக்கலாம் என பிரதேசவாசிகள் நம்புகின்றனர்.படகில் சமையல் பாத்திரங்களும், சில உணவு பொருட்களும் காணப்படுவதோடு, விறகு அடுப்பில் சமைத்த அடையாளங்களும் காணப்படுகின்றன. தகவல் அறிந்த வாகரை பொலிசார் மற்றும் கடற்படை அதிகாரிகள் படகை பார்வையிட்டதோடு, விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.