• Nov 23 2024

நாட்டின் பணவீக்கம் சற்று அதிகரிப்பு!

Tamil nila / Aug 21st 2024, 7:33 pm
image

தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டின் அடிப்படையில் நாட்டின் வருடாந்த பணவீக்கம் ஜூலை 2024 இல் 2.5% ஆக சற்று அதிகரித்துள்ளதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் வருடாந்த பணவீக்கம் ஜூன் 2024 இல்,  2.4% ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், ஜூன் 2024 இல் 1.9% ஆக இருந்த உணவு வகை பணவீக்கம் ஜூலை 2024 இல் 2.9% ஆக அதிகரித்துள்ளது.

ஜூன் மாதத்தில் பதிவு செய்யப்பட்ட 2.7% இல் இருந்து 2024 ஜூலையில் உணவு அல்லாத பணவீக்கம் 2.2% ஆகக் குறைந்துள்ளதாகவும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் பணவீக்கம் சற்று அதிகரிப்பு தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டின் அடிப்படையில் நாட்டின் வருடாந்த பணவீக்கம் ஜூலை 2024 இல் 2.5% ஆக சற்று அதிகரித்துள்ளதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.நாட்டின் வருடாந்த பணவீக்கம் ஜூன் 2024 இல்,  2.4% ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.மேலும், ஜூன் 2024 இல் 1.9% ஆக இருந்த உணவு வகை பணவீக்கம் ஜூலை 2024 இல் 2.9% ஆக அதிகரித்துள்ளது.ஜூன் மாதத்தில் பதிவு செய்யப்பட்ட 2.7% இல் இருந்து 2024 ஜூலையில் உணவு அல்லாத பணவீக்கம் 2.2% ஆகக் குறைந்துள்ளதாகவும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement