காலி பிரதேசத்தில் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை மத்திய நிலையத்தில் நேற்று (20) நடைபெற்ற கணக்கியல் முதலாம் வினாத்தாள்க்கான கணிப்பான் பாவனையின் போது மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மாணவர்கள் வினாத்தாளுக்கு விடையளிக்கும் போது, அவர்களின் கணிப்பான்களை பரிட்சை நிலைய பொறுப்பதிகாரி எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
பரீட்சார்த்திகள் சிலர் பரீட்சை மண்டபத்திற்குள் அங்கீகரிக்கப்படாத கணிப்பான்களை கொண்டு வந்தமையே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், கல்வி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு பரீட்சை எழுதியவர்களுக்கு மீண்டும் கணிப்பான்கள் வழங்கப்பட்டன.
ஆனால், கணிப்பான்களை மீண்டும் தெரிவு செய்ய சில நிமிடங்கள் எடுத்துள்ளதாகவும், விடை எழுத நிலைய பொறுப்பதிகாரி மேலதிக நேரத்தை வழங்கவில்லை எனவும் மாணவர்களின் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
இதனால் தமது பிள்ளைகளுக்கு பெரும் அநீதி ஏற்பட்டுள்ளதாக பெற்றோர்கள் தெரிவித்தனர்.
உயர்தரப் பரீட்சையில் மாணவர்களுக்கு ஏற்பட்ட அநீதி குற்றம்சாட்டும் பெற்றோர். காலி பிரதேசத்தில் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை மத்திய நிலையத்தில் நேற்று (20) நடைபெற்ற கணக்கியல் முதலாம் வினாத்தாள்க்கான கணிப்பான் பாவனையின் போது மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.மாணவர்கள் வினாத்தாளுக்கு விடையளிக்கும் போது, அவர்களின் கணிப்பான்களை பரிட்சை நிலைய பொறுப்பதிகாரி எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.பரீட்சார்த்திகள் சிலர் பரீட்சை மண்டபத்திற்குள் அங்கீகரிக்கப்படாத கணிப்பான்களை கொண்டு வந்தமையே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.இந்நிலையில், கல்வி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு பரீட்சை எழுதியவர்களுக்கு மீண்டும் கணிப்பான்கள் வழங்கப்பட்டன.ஆனால், கணிப்பான்களை மீண்டும் தெரிவு செய்ய சில நிமிடங்கள் எடுத்துள்ளதாகவும், விடை எழுத நிலைய பொறுப்பதிகாரி மேலதிக நேரத்தை வழங்கவில்லை எனவும் மாணவர்களின் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.இதனால் தமது பிள்ளைகளுக்கு பெரும் அநீதி ஏற்பட்டுள்ளதாக பெற்றோர்கள் தெரிவித்தனர்.