• Nov 21 2024

ஐ.பி.எல். 2024 இறுதிப் போட்டி இன்று : கொல்கத்தா - ஹைதராபாத் அணிகள் மோதல்

Tharun / May 26th 2024, 3:37 pm
image

இந்தியன் பிறீமியர் லீக் 2024 இருபது 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை (26) நடைபெறவுள்ளது. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் அரங்கில் இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இப்போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் மோதவுள்ளன.

ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணி கடந்த செவ்வாய்க்கிழமை முதலாவது தகுதிகாண் போட்டியில் ஹைதராபாத்  அணியை 8 விக்கெட்களால் வென்றதன் மூலம் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றிருந்தது.

பட் கம்மின்ஸ் தலைமையிலான ஹைதராபாத் அணியானது, நீக்கல் போட்டியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ஹோயல்ஸ் அணியை  நேற்று முன்தினம் (24) இரவு நடைபெற்ற இரண்டாவது தகுதிகாண் போட்டியில் 36 ஓட்டங்களால் வென்றதன் மூலம் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

இவ்வருட இந்தியன் பிறீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடரில் கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகள் சிறந்த ஆட்டங்களை வெளிப்படுத்தியிருந்தன.  முதல் சுற்றில் கொல்கத்தா அணி 14 போட்டிகளில் 9 வெற்றிகளுடன் 20 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பெற்றது.

ஹைதரபாத், ராஜஸ்தான் அணிகள் தலா 8 வெற்றிகளுடன் தலா 17 புள்ளிகளைப் பெற்றிருந்த போதிலும் ஓட்ட வீத அடிப்படையில் ஹைதராபாத் அணி 2 ஆவது இடத்தைப் பெற்றது.

கொல்கத்தா 4ஆவது தடவையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. 2012, 2014ஆம் ஆண்டுகளில் ஐ.பி.எல். சம்பியன் கிண்ணத்தை வென்றிருந்தது.

ஹைதராபாத் அணி 3ஆவது தடவையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. அவ்வணி 2016 ஆம் ஆண்டில் சம்பியன் கிண்ணத்தை வென்றிருந்தது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் ஐ.பி.எல். போட்டிகளில் 27 தடவைகள் ஒன்றையொன்று எதிர்த்தாடியுள்ளன. இவற்றில் 18 போட்டிகளில் கொல்கத்தாவும் 9 போட்டிகளில் ஹைதராபாத்தும் வென்றுள்ளன.

இவ்வருட ஐ.பி.எல். தொடரின் முதல் சுற்றில் இவ்விரு அணிகளும் சந்தித்துக்கொண்டபோது கொல்கத்தா அணி 4 ஓட்டங்களால் வென்றது.

அதன்பின், முதலாவது தகுதிகாண் போட்டியில் ஹைதராபாத்தை கொல்கத்தா 8 விக்கெட்களால் வென்றது.

இந்நிலையில் இன்றைய இறுதிப்போட்டியில் இவ்வணிகள் மீண்டும் மோதவுள்ளன.

இச்சுற்றுப்போட்டியில் சம்பியனாகும் அணிக்கு வெற்றிக் கிண்ணத்துடன் 20 கோடி ரூபாய் பணப்பரிசு வழங்கப்படும்; 2ஆம் இடத்தை பெறும் அணிக்கு 13 கோடி ரூபாய் வழங்கப்படும்.

இன்றைய போட்டி நடைபெறும் வேளையில் சென்னையில் மழை பெய்ய வாய்ப்பில்லை எனவும் வங்கக்கடலில் உருவான 'ரேமல்' புயல் வடக்கு நோக்கி நகர்வதால், ஐ.பி.எல். இறுதிப்போட்டி பாதிக்கப்படும் வாய்ப்பில்லை எனவும் வானிலை அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இன்றைய இறுதிப்போட்டியை முன்னிட்டு சென்னை சேப்பாக்கம் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலதிகமாக சுமார் 2000 பொலிஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்

ஐ.பி.எல். 2024 இறுதிப் போட்டி இன்று : கொல்கத்தா - ஹைதராபாத் அணிகள் மோதல் இந்தியன் பிறீமியர் லீக் 2024 இருபது 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை (26) நடைபெறவுள்ளது. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் அரங்கில் இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இப்போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் மோதவுள்ளன.ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணி கடந்த செவ்வாய்க்கிழமை முதலாவது தகுதிகாண் போட்டியில் ஹைதராபாத்  அணியை 8 விக்கெட்களால் வென்றதன் மூலம் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றிருந்தது.பட் கம்மின்ஸ் தலைமையிலான ஹைதராபாத் அணியானது, நீக்கல் போட்டியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ஹோயல்ஸ் அணியை  நேற்று முன்தினம் (24) இரவு நடைபெற்ற இரண்டாவது தகுதிகாண் போட்டியில் 36 ஓட்டங்களால் வென்றதன் மூலம் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.இவ்வருட இந்தியன் பிறீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடரில் கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகள் சிறந்த ஆட்டங்களை வெளிப்படுத்தியிருந்தன.  முதல் சுற்றில் கொல்கத்தா அணி 14 போட்டிகளில் 9 வெற்றிகளுடன் 20 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பெற்றது.ஹைதரபாத், ராஜஸ்தான் அணிகள் தலா 8 வெற்றிகளுடன் தலா 17 புள்ளிகளைப் பெற்றிருந்த போதிலும் ஓட்ட வீத அடிப்படையில் ஹைதராபாத் அணி 2 ஆவது இடத்தைப் பெற்றது.கொல்கத்தா 4ஆவது தடவையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. 2012, 2014ஆம் ஆண்டுகளில் ஐ.பி.எல். சம்பியன் கிண்ணத்தை வென்றிருந்தது.ஹைதராபாத் அணி 3ஆவது தடவையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. அவ்வணி 2016 ஆம் ஆண்டில் சம்பியன் கிண்ணத்தை வென்றிருந்தது.கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் ஐ.பி.எல். போட்டிகளில் 27 தடவைகள் ஒன்றையொன்று எதிர்த்தாடியுள்ளன. இவற்றில் 18 போட்டிகளில் கொல்கத்தாவும் 9 போட்டிகளில் ஹைதராபாத்தும் வென்றுள்ளன.இவ்வருட ஐ.பி.எல். தொடரின் முதல் சுற்றில் இவ்விரு அணிகளும் சந்தித்துக்கொண்டபோது கொல்கத்தா அணி 4 ஓட்டங்களால் வென்றது.அதன்பின், முதலாவது தகுதிகாண் போட்டியில் ஹைதராபாத்தை கொல்கத்தா 8 விக்கெட்களால் வென்றது.இந்நிலையில் இன்றைய இறுதிப்போட்டியில் இவ்வணிகள் மீண்டும் மோதவுள்ளன.இச்சுற்றுப்போட்டியில் சம்பியனாகும் அணிக்கு வெற்றிக் கிண்ணத்துடன் 20 கோடி ரூபாய் பணப்பரிசு வழங்கப்படும்; 2ஆம் இடத்தை பெறும் அணிக்கு 13 கோடி ரூபாய் வழங்கப்படும்.இன்றைய போட்டி நடைபெறும் வேளையில் சென்னையில் மழை பெய்ய வாய்ப்பில்லை எனவும் வங்கக்கடலில் உருவான 'ரேமல்' புயல் வடக்கு நோக்கி நகர்வதால், ஐ.பி.எல். இறுதிப்போட்டி பாதிக்கப்படும் வாய்ப்பில்லை எனவும் வானிலை அவதானிகள் தெரிவித்துள்ளனர்.இதேவேளை, இன்றைய இறுதிப்போட்டியை முன்னிட்டு சென்னை சேப்பாக்கம் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலதிகமாக சுமார் 2000 பொலிஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்

Advertisement

Advertisement

Advertisement