கடந்த ஜூன் மாதம் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்த 12 நாள் போரின் போது, ஈரான் தனது விமானப்படையின் மிக முக்கியமான விமானங்களை பாகிஸ்தானில் ரகசியமாக மறைத்து வைத்திருந்தது தற்போது முதன்முறையாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
கராச்சி விமான நிலையத்திலிருந்து வெளியாகியுள்ள செயற்கைக்கோள் மற்றும் தரைவழிப் புகைப்படங்கள் இதனை மெய்ப்பித்துள்ளன.
இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் தனது வான்வழிச் சொத்துக்கள் (Air Assets) அழிந்துவிடக் கூடாது என்பதற்காக, ஈரான் தனது முக்கிய விமானங்களை அண்டை நாடான பாகிஸ்தானுக்கு அனுப்பி வைத்தது.
KC-707 ELINT: மின்னணு உளவுத் தகவல்களைச் சேகரிக்கும் (Electronic Intelligence) மிக அரிதான விமானம்.
போயிங் 747 : ராணுவத் தளவாடங்களைக் கொண்டு செல்லும் பிரம்மாண்ட போக்குவரத்து விமானங்கள் ஆகிய விமானங்களே அனுப்பி வைக்கப்ட்டுள்ளது.
போர் முடிந்து பல மாதங்கள் கடந்த நிலையிலும், இந்த விமானங்கள் இன்னும் பாகிஸ்தானுக்குள்ளேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன.
இஸ்ரேலுடனான அமெரிக்காவின் நெருக்கமான உறவுக்கு மத்தியில், ஈரானுக்கு பாகிஸ்தான் இத்தகையப் பாதுகாப்பை வழங்கியது சர்வதேச அளவில் விவாதங்களைக் கிளப்பியுள்ளது.
பாகிஸ்தானில் பதுக்கப்பட்ட ஈரானிய விமானங்கள்-இஸ்ரேல் தாக்குதலில் தப்பிக்க ஈரானின் பிளான் கடந்த ஜூன் மாதம் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்த 12 நாள் போரின் போது, ஈரான் தனது விமானப்படையின் மிக முக்கியமான விமானங்களை பாகிஸ்தானில் ரகசியமாக மறைத்து வைத்திருந்தது தற்போது முதன்முறையாக உறுதி செய்யப்பட்டுள்ளது. கராச்சி விமான நிலையத்திலிருந்து வெளியாகியுள்ள செயற்கைக்கோள் மற்றும் தரைவழிப் புகைப்படங்கள் இதனை மெய்ப்பித்துள்ளன.இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் தனது வான்வழிச் சொத்துக்கள் (Air Assets) அழிந்துவிடக் கூடாது என்பதற்காக, ஈரான் தனது முக்கிய விமானங்களை அண்டை நாடான பாகிஸ்தானுக்கு அனுப்பி வைத்தது. KC-707 ELINT: மின்னணு உளவுத் தகவல்களைச் சேகரிக்கும் (Electronic Intelligence) மிக அரிதான விமானம்.போயிங் 747 : ராணுவத் தளவாடங்களைக் கொண்டு செல்லும் பிரம்மாண்ட போக்குவரத்து விமானங்கள் ஆகிய விமானங்களே அனுப்பி வைக்கப்ட்டுள்ளது.போர் முடிந்து பல மாதங்கள் கடந்த நிலையிலும், இந்த விமானங்கள் இன்னும் பாகிஸ்தானுக்குள்ளேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன.இஸ்ரேலுடனான அமெரிக்காவின் நெருக்கமான உறவுக்கு மத்தியில், ஈரானுக்கு பாகிஸ்தான் இத்தகையப் பாதுகாப்பை வழங்கியது சர்வதேச அளவில் விவாதங்களைக் கிளப்பியுள்ளது.