• Sep 07 2026

அமெரிக்காவுடன் கைகோர்த்தால் உங்கள் கதை முடிஞ்சு-தென் கொரியாவுக்கு ஈரானின் எச்சரிக்கை!

Ziya / Sep 7th 2026, 2:05 pm
image

ஈரான் மீதான அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகளில் தென் கொரியா நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பங்கேற்கக் கூடாது என்றும், ஹோர்முஸ் ஜலசந்தியில் இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் ஈரான் எச்சரித்துள்ளது.


ஹோர்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்தின் சுதந்திரத்தை உறுதி செய்வதற்கான சர்வதேச முயற்சிகளில் தென் கொரியா எவ்வாறு பங்களிக்க முடியும் என்பது குறித்து அந்நாட்டு அரசு பரிசீலித்து வருவதாக தெரிவித்துள்ள நிலையில், ஈரானின் இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது.


தென் கொரிய அதிபர் அலுவலகம், ஹோர்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து பாதுகாப்புக்கு உதவும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளது.


இதில் இராணுவம், இராணுவம் அல்லாத உதவிகள் மற்றும் தேடுதல்–மீட்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு வாய்ப்புகள் பரிசீலிக்கப்படுவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.


ஆனால், ஹோர்முஸ் பகுதிக்கு படைகளை அனுப்புவது குறித்து எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை என்றும், நாடாளுமன்ற அனுமதி பெறும் நிலைக்கும் விவகாரம் இன்னும் செல்லவில்லை என்றும் தென் கொரிய அதிபர் அலுவலகம் தெளிவுபடுத்தியுள்ளது.


தென் கொரியாவின் இந்த ஆலோசனைக்கு பதிலளித்துள்ள ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி, பாரசீக வளைகுடா மற்றும் ஹோர்முஸ் ஜலசந்தியில் இராணுவ இருப்பை ஏற்படுத்தும் அல்லது நடவடிக்கைகளில் பங்கேற்கும் எந்த நாடும், அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதாகக் கருதப்படும் என எச்சரித்துள்ளார்.


அத்தகைய நடவடிக்கைகள் தொடர்ந்தால் சம்பந்தப்பட்ட நாடுகள் “கடுமையான விளைவுகளை” சந்திக்க நேரிடும் என்றும் அவர் கூறியுள்ளார்.


தெஹ்ரான் மற்றும் சியோலுக்கு இடையே நீண்டகால உறவுகளும் பரஸ்பர மரியாதையும் இருப்பதாகக் குறிப்பிட்ட பாகாயி, அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளில் எந்த நாடும் ஈடுபடக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.


அமெரிக்காவுடன் கைகோர்த்தால் உங்கள் கதை முடிஞ்சு-தென் கொரியாவுக்கு ஈரானின் எச்சரிக்கை ஈரான் மீதான அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகளில் தென் கொரியா நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பங்கேற்கக் கூடாது என்றும், ஹோர்முஸ் ஜலசந்தியில் இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் ஈரான் எச்சரித்துள்ளது.ஹோர்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்தின் சுதந்திரத்தை உறுதி செய்வதற்கான சர்வதேச முயற்சிகளில் தென் கொரியா எவ்வாறு பங்களிக்க முடியும் என்பது குறித்து அந்நாட்டு அரசு பரிசீலித்து வருவதாக தெரிவித்துள்ள நிலையில், ஈரானின் இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது.தென் கொரிய அதிபர் அலுவலகம், ஹோர்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து பாதுகாப்புக்கு உதவும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளது.இதில் இராணுவம், இராணுவம் அல்லாத உதவிகள் மற்றும் தேடுதல்–மீட்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு வாய்ப்புகள் பரிசீலிக்கப்படுவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.ஆனால், ஹோர்முஸ் பகுதிக்கு படைகளை அனுப்புவது குறித்து எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை என்றும், நாடாளுமன்ற அனுமதி பெறும் நிலைக்கும் விவகாரம் இன்னும் செல்லவில்லை என்றும் தென் கொரிய அதிபர் அலுவலகம் தெளிவுபடுத்தியுள்ளது.தென் கொரியாவின் இந்த ஆலோசனைக்கு பதிலளித்துள்ள ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி, பாரசீக வளைகுடா மற்றும் ஹோர்முஸ் ஜலசந்தியில் இராணுவ இருப்பை ஏற்படுத்தும் அல்லது நடவடிக்கைகளில் பங்கேற்கும் எந்த நாடும், அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதாகக் கருதப்படும் என எச்சரித்துள்ளார்.அத்தகைய நடவடிக்கைகள் தொடர்ந்தால் சம்பந்தப்பட்ட நாடுகள் “கடுமையான விளைவுகளை” சந்திக்க நேரிடும் என்றும் அவர் கூறியுள்ளார்.தெஹ்ரான் மற்றும் சியோலுக்கு இடையே நீண்டகால உறவுகளும் பரஸ்பர மரியாதையும் இருப்பதாகக் குறிப்பிட்ட பாகாயி, அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளில் எந்த நாடும் ஈடுபடக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement