• Sep 04 2025

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ள சஜித்?

Chithra / Sep 4th 2025, 12:29 pm
image

 

எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமாகிய சஜித் பிரேமதாச கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைய அவர் அழைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக அரச நிதி பயன்படுத்தப்பட்டதாக முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது


இந்நிலையில் இலஞ்ச ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுக்களை புகாரளிப்பதற்காக  இலஞ்ச ஊழல் ஆணைக்குழு புதிய வட்ஸ்அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி, இலஞ்சம் தொடர்பான கோரிக்கைகள் அல்லது இலஞ்சம் பெறுகின்ற சம்பவங்கள் தொடர்பான  

புகார்களை 077 777 1954 என்ற தொலைபேசி இலக்கத்தின் வட்ஸ்அப்  மூலம் சமர்ப்பிக்க முடியும் என்று ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ள சஜித்  எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமாகிய சஜித் பிரேமதாச கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைய அவர் அழைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக அரச நிதி பயன்படுத்தப்பட்டதாக முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கதுஇந்நிலையில் இலஞ்ச ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுக்களை புகாரளிப்பதற்காக  இலஞ்ச ஊழல் ஆணைக்குழு புதிய வட்ஸ்அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.அதன்படி, இலஞ்சம் தொடர்பான கோரிக்கைகள் அல்லது இலஞ்சம் பெறுகின்ற சம்பவங்கள் தொடர்பான  புகார்களை 077 777 1954 என்ற தொலைபேசி இலக்கத்தின் வட்ஸ்அப்  மூலம் சமர்ப்பிக்க முடியும் என்று ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement