• Feb 16 2026

சட்டமா அதிபர் பதவி அரசாங்கத்தின் சுயாதீனமான பதவியா? சபையில் சஜித் கேள்வி!

shanuja / Jan 23rd 2026, 3:17 pm
image

சட்டமா அதிபர் பதவி அரசாங்கத்தின் சுயாதீனமான பதவியா? என எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச கேள்வியெழுப்பினார். 


பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற பல்கலைக்கழக திருத்த விவாதத்தில் உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 



சட்டமா அதிபர் பதவி அரசாங்கத்தின் சுயாதீனமான பதவியா? சட்டமா அதிபருக்கு அழுத்தம் இல்லாமல் சுயாதீனமாக செயற்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார். 


அதற்குப் பதிலளித்த நீதி அமைச்சர் ஹர்சன நாணயக்கார,


அரசியலமைப்புப் பேரவையால் அங்கீகரிக்கப்பட்ட பின்னர் ஜனாதிபதியால் நியமிக்கப்படும். ஜனாதிபதிக்கு சட்டமா அதிபரை நியமிக்க அனுமதி உள்ளது. ஆகவே சட்டமா அதிபர் பதவி சுயாதீன பதவியாகும். 


தற்கால அரசாங்கத்தில் சுயாதீனமாக சட்டமா அதிபர் செயற்பட அரசாங்கம் நடவடிக்கை  எடுத்து வருகின்றது. பதவி நீக்கம் அதன் காரணங்களை அடிப்படையாகக் கொண்டு ஜனாதிபதியே முடிவு எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார். 


சட்டமா அதிபர் பதவி அரசாங்கத்தின் சுயாதீனமான பதவியா சபையில் சஜித் கேள்வி சட்டமா அதிபர் பதவி அரசாங்கத்தின் சுயாதீனமான பதவியா என எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச கேள்வியெழுப்பினார். பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற பல்கலைக்கழக திருத்த விவாதத்தில் உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், சட்டமா அதிபர் பதவி அரசாங்கத்தின் சுயாதீனமான பதவியா சட்டமா அதிபருக்கு அழுத்தம் இல்லாமல் சுயாதீனமாக செயற்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார். அதற்குப் பதிலளித்த நீதி அமைச்சர் ஹர்சன நாணயக்கார,அரசியலமைப்புப் பேரவையால் அங்கீகரிக்கப்பட்ட பின்னர் ஜனாதிபதியால் நியமிக்கப்படும். ஜனாதிபதிக்கு சட்டமா அதிபரை நியமிக்க அனுமதி உள்ளது. ஆகவே சட்டமா அதிபர் பதவி சுயாதீன பதவியாகும். தற்கால அரசாங்கத்தில் சுயாதீனமாக சட்டமா அதிபர் செயற்பட அரசாங்கம் நடவடிக்கை  எடுத்து வருகின்றது. பதவி நீக்கம் அதன் காரணங்களை அடிப்படையாகக் கொண்டு ஜனாதிபதியே முடிவு எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார். 

Advertisement

Advertisement

Advertisement