• Oct 30 2024

நாட்டில் அரிசிக்கு தட்டுப்பாடா? - மோசடி குறித்து விவசாய அமைச்சு வெளியிட்ட தகவல்

Chithra / Oct 29th 2024, 1:09 pm
image

Advertisement

 

ஜனாதிபதியின் பணிப்புரையின் பிரகாரம், கடந்த சில தினங்களாகப் பெறப்பட்ட தரவுகளின்படி, நாட்டில் போதியளவு நாட்டு அரிசி கையிருப்பில் இருப்பதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. 

இதன்படி, நாட்டில் அரிசி தட்டுப்பாடு என்பது ஒரு ஏமாற்று வேலை என அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. 

அரிசி ஆலைகள் சந்தையில் அரிசியின் விலையை அவர்கள் விரும்பியவாறு தீர்மானிக்க அரசாங்கம் அனுமதிக்காது. 

சந்தையில் கட்டுப்பாட்டு விலைக்கு அரிசி கிடைக்காமல் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், அரிசி இருப்பு குறித்த அறிக்கையைப் பெறும் நோக்கில் அரசு தலையிட்டு அனைத்து அரிசி ஆலை கிடங்குகளிலும் ஆய்வு மேற்கொண்டது.  

இதன்படி, குறித்த ஆய்வுகளின் மூலம் பெறப்பட்ட இருப்பு அறிக்கைகள் இன்று ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக, கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த விவசாய அமைச்சின் செயலாளர் எம்.பி.என்.எம் விக்ரமசிங்க தெரிவித்தார். 

நாட்டில் அரிசிக்கு தட்டுப்பாடா - மோசடி குறித்து விவசாய அமைச்சு வெளியிட்ட தகவல்  ஜனாதிபதியின் பணிப்புரையின் பிரகாரம், கடந்த சில தினங்களாகப் பெறப்பட்ட தரவுகளின்படி, நாட்டில் போதியளவு நாட்டு அரிசி கையிருப்பில் இருப்பதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, நாட்டில் அரிசி தட்டுப்பாடு என்பது ஒரு ஏமாற்று வேலை என அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. அரிசி ஆலைகள் சந்தையில் அரிசியின் விலையை அவர்கள் விரும்பியவாறு தீர்மானிக்க அரசாங்கம் அனுமதிக்காது. சந்தையில் கட்டுப்பாட்டு விலைக்கு அரிசி கிடைக்காமல் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், அரிசி இருப்பு குறித்த அறிக்கையைப் பெறும் நோக்கில் அரசு தலையிட்டு அனைத்து அரிசி ஆலை கிடங்குகளிலும் ஆய்வு மேற்கொண்டது.  இதன்படி, குறித்த ஆய்வுகளின் மூலம் பெறப்பட்ட இருப்பு அறிக்கைகள் இன்று ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக, கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த விவசாய அமைச்சின் செயலாளர் எம்.பி.என்.எம் விக்ரமசிங்க தெரிவித்தார். 

Advertisement

Advertisement

Advertisement