எமது உரிமையை வெல்வதற்கு ஒரே கோட்பாட்டின் அடிப்படையில் அணிசேர்வீர் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா வேண்டுகோள். தென்னிலங்கை கட்சிகளும் அரசியல் வாதிகளும் தங்களது நிகழ்ச்சி நிரல்களை தமிழர் பகுதிகளில் மிக நிதானமாக நகர்த்தி வருகின்றனர்.
அவர்களுக்கு வசைபாடுவதற்கும் அவர்களுடன் சேர்ந்து தமிழர்களின் வரலாறுகளை திரிவுபடுத்த துணைபோவதற்கும் ஒரு கூட்டம் இருக்கின்றது என்கின்றார் சனநாயக தமிழரசுக் கூட்டமைப்பின் தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி.தவராசா அவர்கள்.
எமது மக்கள் காலம் காலமாக சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்தவர்களாக இருந்து வருகின்றனர். இந்தத் துயரநிலை தொடர்ந்தும் நீடிக்கமுடியாது. ஆகவே நாம் அனைவரும் குறை கூறுபவர்களாக இருக்காமல் எமது மக்களின் குறைகளையும் வேதனைகளையும் எப்படித் தீர்க்கலாம் என்பது பற்றி நிதானமாக முடிவெடுக்க வேண்டியவர்களாக மாறவேண்டும் என்றார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில். இன்று நாம் அனைவரும் ஒரு இக்கட்டான காலகட்டத்தில் இருக்கின்றோம். எங்களுடைய தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஒன்றுமையின்மை என்பது எமது மக்களுக்கான மிகப்பெரும் சாபக்கேடாக மாறியிருக்கின்றது. இந்தக் கொடிய நிலை ஆட்சியாளர்களுக்கும் தென்னிலங்கை பேரினவாதக் கட்சிகளுக்கும் ஒரு சாதகமான சூழலை ஏற்படுத்திக் கொடுக்கின்றது.
எனவே தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தும் கட்சி ரீதியாக இல்லாவிட்டாலும் கொள்கை ரீதியாக ஒன்று படுவது தவிர்க்க முடியாததொன்றாகும். ஆகவே இங்கு நான் முக்கியமாக கூற முற்படுவது. சில தமிழ்த் தேசியக் கட்சிகள் காணி, பொலிஸ் அதிகாரம் உள்ளிட்ட மாகாண சபை முறைமையை ஏற்கத் தயார் என்கின்றனர். சில தமிழ்த்தேசியக் கட்சிகள் சமஸ்டிதான் தமிழ் மக்களுக்கான தீர்வு என்கின்றனர். இதுதான் எங்களிடம் உள்ள வேற்றுமை. இதிலிருந்து நாம் விடுபடுகின்ற பட்சத்தில்தான் எம் இனத்துக்கான விடுதலை சாத்தியமாகும் என்றார், சனநாயக தமிழரசுக் கூட்டமைப்பின் தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே வி. தவராசா அவர்கள்.
தமிழ்த்தேசியக் கட்சிகள் அனைத்தும் கட்சிரீதியாக இல்லாவிட்டாலும் கொள்கைரீதியாக ஒன்றுபடுவது தவிர்க்க முடியாது - கே.வி.தவராசா எமது உரிமையை வெல்வதற்கு ஒரே கோட்பாட்டின் அடிப்படையில் அணிசேர்வீர் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா வேண்டுகோள். தென்னிலங்கை கட்சிகளும் அரசியல் வாதிகளும் தங்களது நிகழ்ச்சி நிரல்களை தமிழர் பகுதிகளில் மிக நிதானமாக நகர்த்தி வருகின்றனர். அவர்களுக்கு வசைபாடுவதற்கும் அவர்களுடன் சேர்ந்து தமிழர்களின் வரலாறுகளை திரிவுபடுத்த துணைபோவதற்கும் ஒரு கூட்டம் இருக்கின்றது என்கின்றார் சனநாயக தமிழரசுக் கூட்டமைப்பின் தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி.தவராசா அவர்கள்.எமது மக்கள் காலம் காலமாக சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்தவர்களாக இருந்து வருகின்றனர். இந்தத் துயரநிலை தொடர்ந்தும் நீடிக்கமுடியாது. ஆகவே நாம் அனைவரும் குறை கூறுபவர்களாக இருக்காமல் எமது மக்களின் குறைகளையும் வேதனைகளையும் எப்படித் தீர்க்கலாம் என்பது பற்றி நிதானமாக முடிவெடுக்க வேண்டியவர்களாக மாறவேண்டும் என்றார்.அவர் தொடர்ந்து தெரிவிக்கையில். இன்று நாம் அனைவரும் ஒரு இக்கட்டான காலகட்டத்தில் இருக்கின்றோம். எங்களுடைய தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஒன்றுமையின்மை என்பது எமது மக்களுக்கான மிகப்பெரும் சாபக்கேடாக மாறியிருக்கின்றது. இந்தக் கொடிய நிலை ஆட்சியாளர்களுக்கும் தென்னிலங்கை பேரினவாதக் கட்சிகளுக்கும் ஒரு சாதகமான சூழலை ஏற்படுத்திக் கொடுக்கின்றது.எனவே தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தும் கட்சி ரீதியாக இல்லாவிட்டாலும் கொள்கை ரீதியாக ஒன்று படுவது தவிர்க்க முடியாததொன்றாகும். ஆகவே இங்கு நான் முக்கியமாக கூற முற்படுவது. சில தமிழ்த் தேசியக் கட்சிகள் காணி, பொலிஸ் அதிகாரம் உள்ளிட்ட மாகாண சபை முறைமையை ஏற்கத் தயார் என்கின்றனர். சில தமிழ்த்தேசியக் கட்சிகள் சமஸ்டிதான் தமிழ் மக்களுக்கான தீர்வு என்கின்றனர். இதுதான் எங்களிடம் உள்ள வேற்றுமை. இதிலிருந்து நாம் விடுபடுகின்ற பட்சத்தில்தான் எம் இனத்துக்கான விடுதலை சாத்தியமாகும் என்றார், சனநாயக தமிழரசுக் கூட்டமைப்பின் தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே வி. தவராசா அவர்கள்.