• Apr 19 2026

மண்டபம் வடக்கு கடற்கரை அருகே கஞ்சா, நிலக்கரி, வெளிநாட்டு சிகரெட் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல்!

shanu / Mar 30th 2026, 10:15 am
image

மண்டபம் வடக்கு கடல் வழியாக  படகில்  இலங்கைக்கு கடத்த குடோன் ஒன்றில் பதுக்கி வைப்பதற்காக  வாகனத்தில் கொண்டு  செல்லப்பட்ட இந்திய மதிப்பில் சுமார்  50 லட்சம்  ரூபாய் பெறுமதியான கஞ்சா, சமையல் மஞ்சள், ஏலக்காய், நிலக்கரி, வெளிநாட்டு சிகரெட், பூச்சிக்கொல்லி உள்ளிட்ட கடத்தல் பொருட்களை   வாகனத்துடன் பறிமுதல் செய்துள்ளதோடு குறித்த சம்பவத்துடன்    தொடர்புடைய இருவரை பிடித்து மரைன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே நேற்று (28)  இரவு தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை சாவடியில் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அவ்வழியாக சென்ற   வாகனம் ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.


அப்போது அந்த வாகனத்தில் சமையல் மஞ்சள் மூட்டைகள் இருந்தது தெரியவந்ததையடுத்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மஞ்சள் மூடைகளுக்கான ரசீதை வாகன ஓட்டுனரிடம் கேட்டுள்ளனர். 


சரக்கு வாகன ஓட்டுனரும் உரிய ஆவணங்களை சமர்ப்பித்ததால் வாகனம் அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டது. இருப்பினும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் சரக்கு வாகனத்தில் மஞ்சள் மூட்டைகள் அதிகளவு எடுத்து செல்வது குறித்து மரைன் காவல் ஆய்வாளர் ஜான்சிராணிக்கு தகவல் அளித்தனர்.


அதன் அடிப்படையில் அந்த சரக்கு வாகனத்தை பின் தொடர்ந்து வந்த மரைன் போலீசார்   வாகனம் மண்டபம் வடக்கு கடற்கரை அருகே உள்ள டி நகர் பகுதியில் உள்ள ஒரு குடோனில்   வாகனத்தில் உள்ள  பொருட்களை இறக்கி பதுக்கி வைத்துக் கொண்டிருந்த போது மரைன் போலீசார் சுற்றி வளைத்தனர்.


பின்னர் மரைன் போலீசார் சரக்கு வாகனத்தை  சோதனை செய்த போது இலங்கைக்கு கடத்துவதற்காக சரக்கு வாகனத்தில்  கஞ்சா இரண்டு கிலோ கஞ்சா, இரண்டு டன் எடை கொண்ட சமையல் மஞ்சள் மூட்டைகள், பத்தாயிரம் வெளிநாட்டு சிகரெட்கள், 308 கிலோ நிலக்கரி, 100 பண்டல் பீடி, 56 லிட்டர் பூச்சிக்கொல்லி, 10 கிலோ ஏலக்காய்,  60 கிலோ மஞ்சள் பொடி உள்ளிட்ட பொருட்கள் இருந்தது தெரியவந்தது.


 இதையடுத்து  வாகனத்துடன் கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்த மரைன் போலீசார் சரக்கு வாகனத்தின் உரிமையாளர் மற்றும் அந்த குடோனின் உரிமையாளர் இருவரையும் பிடித்து மண்டபம் மரைன் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மரைன் போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் கடத்தல்  பொருட்கள் அனைத்தும் கொண்டுவரப்பட்டு குடோனில் பதுக்கி வைத்து பின்னர் மண்டபம் வடக்கு கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு   படகில் கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த தெரிய வந்தது.


பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் சர்வதேச மதிப்பு  .50 லட்சம் இருக்கலாம் என மரைன் போலீசார் தெரிவித்துள்ளனர்.


சமையல் மஞ்சள், கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் கடல் வழியாக இலங்கைக்கு அடிக்கடி கடத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது முதல் முறையாக நிலக்கரி மூட்டை பிடிபட்டுள்ளது பாதுகாப்பு வட்டார அதிகாரிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

மண்டபம் வடக்கு கடற்கரை அருகே கஞ்சா, நிலக்கரி, வெளிநாட்டு சிகரெட் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் மண்டபம் வடக்கு கடல் வழியாக  படகில்  இலங்கைக்கு கடத்த குடோன் ஒன்றில் பதுக்கி வைப்பதற்காக  வாகனத்தில் கொண்டு  செல்லப்பட்ட இந்திய மதிப்பில் சுமார்  50 லட்சம்  ரூபாய் பெறுமதியான கஞ்சா, சமையல் மஞ்சள், ஏலக்காய், நிலக்கரி, வெளிநாட்டு சிகரெட், பூச்சிக்கொல்லி உள்ளிட்ட கடத்தல் பொருட்களை   வாகனத்துடன் பறிமுதல் செய்துள்ளதோடு குறித்த சம்பவத்துடன்    தொடர்புடைய இருவரை பிடித்து மரைன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே நேற்று (28)  இரவு தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை சாவடியில் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அவ்வழியாக சென்ற   வாகனம் ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.அப்போது அந்த வாகனத்தில் சமையல் மஞ்சள் மூட்டைகள் இருந்தது தெரியவந்ததையடுத்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மஞ்சள் மூடைகளுக்கான ரசீதை வாகன ஓட்டுனரிடம் கேட்டுள்ளனர். சரக்கு வாகன ஓட்டுனரும் உரிய ஆவணங்களை சமர்ப்பித்ததால் வாகனம் அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டது. இருப்பினும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் சரக்கு வாகனத்தில் மஞ்சள் மூட்டைகள் அதிகளவு எடுத்து செல்வது குறித்து மரைன் காவல் ஆய்வாளர் ஜான்சிராணிக்கு தகவல் அளித்தனர்.அதன் அடிப்படையில் அந்த சரக்கு வாகனத்தை பின் தொடர்ந்து வந்த மரைன் போலீசார்   வாகனம் மண்டபம் வடக்கு கடற்கரை அருகே உள்ள டி நகர் பகுதியில் உள்ள ஒரு குடோனில்   வாகனத்தில் உள்ள  பொருட்களை இறக்கி பதுக்கி வைத்துக் கொண்டிருந்த போது மரைன் போலீசார் சுற்றி வளைத்தனர்.பின்னர் மரைன் போலீசார் சரக்கு வாகனத்தை  சோதனை செய்த போது இலங்கைக்கு கடத்துவதற்காக சரக்கு வாகனத்தில்  கஞ்சா இரண்டு கிலோ கஞ்சா, இரண்டு டன் எடை கொண்ட சமையல் மஞ்சள் மூட்டைகள், பத்தாயிரம் வெளிநாட்டு சிகரெட்கள், 308 கிலோ நிலக்கரி, 100 பண்டல் பீடி, 56 லிட்டர் பூச்சிக்கொல்லி, 10 கிலோ ஏலக்காய்,  60 கிலோ மஞ்சள் பொடி உள்ளிட்ட பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து  வாகனத்துடன் கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்த மரைன் போலீசார் சரக்கு வாகனத்தின் உரிமையாளர் மற்றும் அந்த குடோனின் உரிமையாளர் இருவரையும் பிடித்து மண்டபம் மரைன் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மரைன் போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் கடத்தல்  பொருட்கள் அனைத்தும் கொண்டுவரப்பட்டு குடோனில் பதுக்கி வைத்து பின்னர் மண்டபம் வடக்கு கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு   படகில் கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த தெரிய வந்தது.பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் சர்வதேச மதிப்பு  .50 லட்சம் இருக்கலாம் என மரைன் போலீசார் தெரிவித்துள்ளனர்.சமையல் மஞ்சள், கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் கடல் வழியாக இலங்கைக்கு அடிக்கடி கடத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது முதல் முறையாக நிலக்கரி மூட்டை பிடிபட்டுள்ளது பாதுகாப்பு வட்டார அதிகாரிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement