அற்றோனித் தத்துவத்தை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கனடா நாட்டில் வசிக்கும் நபர் ஒருவர் யாழ். மானிப்பாய் பகுதியில் உள்ள தனது ஆதனங்கள் சிலவற்றுக்கு யாழ்ப்பாணத்தை சேர்ந்தவருக்கு தனது அற்றோனித் தத்துவத்தை வழங்கியுள்ளார்.
குறித்த நபர் தனக்கு அற்றோனித் தத்துவத்தில் வழங்கப்படாத அதிகாரத்தை பயன்படுத்தி மேலும் சில ஆதனங்களை மோசடியாக உரிம மாற்றம் செய்துள்ளார்.
இது தொடர்பில் கனடாவை சேர்ந்த நபர் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து இருவரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் விசாரணைகளின் பின்னர் நேற்று நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில், அவர்களை பிணையில் செல்ல மன்று அனுமதித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
கனடாவில் வசிக்கும் நபருக்கு யாழ். வாசி கொடுத்த அதிர்ச்சி அற்றோனித் தத்துவத்தை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கனடா நாட்டில் வசிக்கும் நபர் ஒருவர் யாழ். மானிப்பாய் பகுதியில் உள்ள தனது ஆதனங்கள் சிலவற்றுக்கு யாழ்ப்பாணத்தை சேர்ந்தவருக்கு தனது அற்றோனித் தத்துவத்தை வழங்கியுள்ளார்.குறித்த நபர் தனக்கு அற்றோனித் தத்துவத்தில் வழங்கப்படாத அதிகாரத்தை பயன்படுத்தி மேலும் சில ஆதனங்களை மோசடியாக உரிம மாற்றம் செய்துள்ளார்.இது தொடர்பில் கனடாவை சேர்ந்த நபர் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து இருவரை கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட இருவரையும் விசாரணைகளின் பின்னர் நேற்று நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில், அவர்களை பிணையில் செல்ல மன்று அனுமதித்ததாக தெரிவிக்கப்படுகிறது.