• Aug 12 2025

யாழ்ப்பாணம் சர்வதேச புத்தக கண்காட்சி!

shanuja / Aug 11th 2025, 2:59 pm
image

யாழ்ப்பாணம் சர்வதேச புத்தக கண்காட்சி எதிர்வரும் 15 ஆம் திகதி யாழில் நடைபெறவுள்ளது.


யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை குறித்த கண்காட்சி நடைபெறவுள்ளது.


யாழ்ப்பாணம் வர்த்தக தொழிற்துறை மன்றத்தின் ஏற்பாட்டில் 15 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை 3 நாட்கள் நடைபெறவுள்ள  கண்காட்சியில் 20 புத்தக கண்காட்சி கூடங்கள் அமைக்கப்படவுள்ளன.


இளம் தலைமுறையினர் மத்தியில் வாசிப்பு பழக்கம் அருகி வருவதனால், இளம் தலைமுறையினர் மத்தியில் வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்கவும், சர்வதேச புத்தகங்களை இளம் சமுதாயத்தினரும், பாடசாலை மாணவர்களும் அறிந்துகொள்ளவும் இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் சர்வதேச புத்தக கண்காட்சி யாழ்ப்பாணம் சர்வதேச புத்தக கண்காட்சி எதிர்வரும் 15 ஆம் திகதி யாழில் நடைபெறவுள்ளது.யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை குறித்த கண்காட்சி நடைபெறவுள்ளது.யாழ்ப்பாணம் வர்த்தக தொழிற்துறை மன்றத்தின் ஏற்பாட்டில் 15 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை 3 நாட்கள் நடைபெறவுள்ள  கண்காட்சியில் 20 புத்தக கண்காட்சி கூடங்கள் அமைக்கப்படவுள்ளன.இளம் தலைமுறையினர் மத்தியில் வாசிப்பு பழக்கம் அருகி வருவதனால், இளம் தலைமுறையினர் மத்தியில் வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்கவும், சர்வதேச புத்தகங்களை இளம் சமுதாயத்தினரும், பாடசாலை மாணவர்களும் அறிந்துகொள்ளவும் இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement