யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப் பீடத்தின் சட்டத்துறை நடாத்தும் யாழ்ப்பாண சட்ட மாநாடு எதிர்வரும் 27ஆம், 28 ஆம் திகதிகளில் யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட ஹூவர் அரங்கில் நடைபெறவுள்ளது.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் ஊடக விபரிப்பொன்று கலைப் பீடாதிபதி சி. ரகுராம் தலைமையில் இன்று நடைபெற்றது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சட்டத் துறையானது 2005 ஆம் ஆண்டிலிருந்து சட்டமாணிப் பட்டத்தை வழங்குகின்ற ஒரு உயர்கல்வி நிறுவனமாக இயங்கி வருகின்றது. அதன் கல்விப்பணியின் பிறிதொரு மைல்கல்லாக யாழ்ப்பாணத்தில் சட்டமாநாடு ஒன்றை நடாத்த விரும்பியது. அதற்கமைய இந்தியாவின் புகழ் பெற்ற சுரனா மற்றும் சுரனா சர்வதேச வழக்கறிஞர்கள் நிறுவனத்துடன் இணைந்து தை மாதம் 27 ஆம் மற்றும் 28 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் ஹூவர் கலையரங்கத்தில் யாழ்ப்பாண சட்ட மாநாடு என்னும் பெயரிலான மாநாட்டினை நடாத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
யாழ்ப்பாண சட்ட மாநாடானது நெருக்கடிகளுக்கூடான வழிகள் என்னும் தொனிப்பொருளில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இம்மாநாட்டின் நோக்கங்களாக சட்டப் பரப்பில் அதிகம் பேசப்படாத விடயங்ளைப் பேசுதல், பன்மைத்துவ ஆய்வை ஊக்குவித்தல், அவ்வகை ஆய்வு முயற்சிகளை கலந்துரையாடுவதற்கான களமொன்றை அமைத்தல்,
சட்டப் புலமையாளர்கள், ஆய்வாளர்கள் ஆகியோரையும் அவர்களின் ஆய்வுச் சிந்தனைகளையும் ஒன்றிணைத்தல், எழுத்திலுள்ள சட்டத்திற்கும் அதன் செயற்பாட்டிற்குமான இடைவெளியைக் குறைத்தல், சட்ட மாணவர்களுக்கு சடடத்துறை சார் ஆய்வுச் சிந்தனைகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் துறைசார் நிபுணர்களுடனான வலையமைப்பை ஏற்படுத்தல் ஆகிய பல்வேறு நோக்கங்களைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
முதல் நாள் நிகழ்வின் பிரதம விருந்தினராக இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் சட்டமா அதிபர் திரு சஞ்சய் ராஜரட்ணம் அவர்களும், கௌரவ விருந்தினராக ஐக்கிய நாடுகளின் முன்னாள் நேருதவிச் செயலாளரும், சிறுவர் மற்றும் ஆயுத முரண்பாடு தொடர்பான செயலாளர் நாயகத்தின் விசேட பிரதிநிதியுமான கலாநிதி ராதிகா குமாரசுவாமி அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
முதல் நாள் நிகழ்வின் சிறப்பு நிகழ்வாக இலங்கையின் புகழ்பூத்த ஜனாதிபதி சடடத்தரணி கலாநிதி கனகீஸ்வரன் அவர்களினதும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் வாழ்நாள் பேராசிரியர் சொர்ணராஜா அவர்களினதும் சிறப்புரைகள் இடம்பெறவுள்ளன.
இலங்கையில் பகிரங்க சடடத்தின் எதிர்காலம் -நெருக்கடிகளும் சவால்களும் என்னும் தலைப்பிலான கலந்துரையாடல் நிகழ்வொன்றும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் நாள் நிகழ்வில் இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் உயர்நீதிமன்ற நீதிபதி யசந்த கோதாகொட அவர்கள் பிரதம விருந்தினராகவும் அரசியலமைப்புச் சட்ட நிபுணர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி ஜயம்பதி விக்ரமரட்ண அவர்கள் கௌரவ விருந்தினராகவும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்
இரண்டாம் நாள் நிகழ்வின் சிறப்பம்சமாக அமெரிக்காவின் யாலே (Yale) பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறைத் துணைப் பேராசிரியர் திரு ரோஹித் டே அவர்களும் சுரனா மற்றும் சுரனா சர்வதேச வழக்கறிஞர் நிறுவனத்தின் முகாமைத்துவப் பங்காளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான கலாநிதி வினோத் சுரனா அவர்களும் சிறப்புரைகள் ஆற்றவுள்ளனர்.
அத்துடன் இலங்கையின் பொருளாதார நெருக்கடியிலிருந்து மேலெழுவதற்கான சட்டத்தின் வகிபாகம் என்னும் தலைப்பிலான கலந்துரையாடலானது இரண்டாம் நாளின் மறறொரு சிறப்பு நிகழ்வாகும்.
மாநாட்டிற்காக சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைச் சுருக்கங்கள் இரண்டு நாள் அமர்வின் போதும் ஆய்வாளர்களால் வாசிக்கப்படவுள்ளமையும் யாழ்ப்பாண சட்ட மாநாட்டின் சிறப்பம்சங்களில் ஒன்றாகும்.
சமகாலப் பிரச்சினைகளினை முன்னிறுத்தியதாக பல்வேறு சட்ட விடயங்களை ஆராய்ந்து அதனூடாக இலங்கையின் வடபிராந்தியத்தின் பொருளாதார, சமூக விடயங்களை வினைத்திறனாக அணுகும் தன்மையிலும் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப் பீடத்தின் சட்டத்துறை நடாத்தும் யாழ்ப்பாண சட்ட மாநாடு.samugammedia யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப் பீடத்தின் சட்டத்துறை நடாத்தும் யாழ்ப்பாண சட்ட மாநாடு எதிர்வரும் 27ஆம், 28 ஆம் திகதிகளில் யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட ஹூவர் அரங்கில் நடைபெறவுள்ளது. இது தொடர்பில் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் ஊடக விபரிப்பொன்று கலைப் பீடாதிபதி சி. ரகுராம் தலைமையில் இன்று நடைபெற்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சட்டத் துறையானது 2005 ஆம் ஆண்டிலிருந்து சட்டமாணிப் பட்டத்தை வழங்குகின்ற ஒரு உயர்கல்வி நிறுவனமாக இயங்கி வருகின்றது. அதன் கல்விப்பணியின் பிறிதொரு மைல்கல்லாக யாழ்ப்பாணத்தில் சட்டமாநாடு ஒன்றை நடாத்த விரும்பியது. அதற்கமைய இந்தியாவின் புகழ் பெற்ற சுரனா மற்றும் சுரனா சர்வதேச வழக்கறிஞர்கள் நிறுவனத்துடன் இணைந்து தை மாதம் 27 ஆம் மற்றும் 28 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் ஹூவர் கலையரங்கத்தில் யாழ்ப்பாண சட்ட மாநாடு என்னும் பெயரிலான மாநாட்டினை நடாத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.யாழ்ப்பாண சட்ட மாநாடானது நெருக்கடிகளுக்கூடான வழிகள் என்னும் தொனிப்பொருளில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இம்மாநாட்டின் நோக்கங்களாக சட்டப் பரப்பில் அதிகம் பேசப்படாத விடயங்ளைப் பேசுதல், பன்மைத்துவ ஆய்வை ஊக்குவித்தல், அவ்வகை ஆய்வு முயற்சிகளை கலந்துரையாடுவதற்கான களமொன்றை அமைத்தல்,சட்டப் புலமையாளர்கள், ஆய்வாளர்கள் ஆகியோரையும் அவர்களின் ஆய்வுச் சிந்தனைகளையும் ஒன்றிணைத்தல், எழுத்திலுள்ள சட்டத்திற்கும் அதன் செயற்பாட்டிற்குமான இடைவெளியைக் குறைத்தல், சட்ட மாணவர்களுக்கு சடடத்துறை சார் ஆய்வுச் சிந்தனைகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் துறைசார் நிபுணர்களுடனான வலையமைப்பை ஏற்படுத்தல் ஆகிய பல்வேறு நோக்கங்களைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.முதல் நாள் நிகழ்வின் பிரதம விருந்தினராக இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் சட்டமா அதிபர் திரு சஞ்சய் ராஜரட்ணம் அவர்களும், கௌரவ விருந்தினராக ஐக்கிய நாடுகளின் முன்னாள் நேருதவிச் செயலாளரும், சிறுவர் மற்றும் ஆயுத முரண்பாடு தொடர்பான செயலாளர் நாயகத்தின் விசேட பிரதிநிதியுமான கலாநிதி ராதிகா குமாரசுவாமி அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.முதல் நாள் நிகழ்வின் சிறப்பு நிகழ்வாக இலங்கையின் புகழ்பூத்த ஜனாதிபதி சடடத்தரணி கலாநிதி கனகீஸ்வரன் அவர்களினதும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் வாழ்நாள் பேராசிரியர் சொர்ணராஜா அவர்களினதும் சிறப்புரைகள் இடம்பெறவுள்ளன.இலங்கையில் பகிரங்க சடடத்தின் எதிர்காலம் -நெருக்கடிகளும் சவால்களும் என்னும் தலைப்பிலான கலந்துரையாடல் நிகழ்வொன்றும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.இரண்டாம் நாள் நிகழ்வில் இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் உயர்நீதிமன்ற நீதிபதி யசந்த கோதாகொட அவர்கள் பிரதம விருந்தினராகவும் அரசியலமைப்புச் சட்ட நிபுணர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி ஜயம்பதி விக்ரமரட்ண அவர்கள் கௌரவ விருந்தினராகவும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்இரண்டாம் நாள் நிகழ்வின் சிறப்பம்சமாக அமெரிக்காவின் யாலே (Yale) பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறைத் துணைப் பேராசிரியர் திரு ரோஹித் டே அவர்களும் சுரனா மற்றும் சுரனா சர்வதேச வழக்கறிஞர் நிறுவனத்தின் முகாமைத்துவப் பங்காளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான கலாநிதி வினோத் சுரனா அவர்களும் சிறப்புரைகள் ஆற்றவுள்ளனர்.அத்துடன் இலங்கையின் பொருளாதார நெருக்கடியிலிருந்து மேலெழுவதற்கான சட்டத்தின் வகிபாகம் என்னும் தலைப்பிலான கலந்துரையாடலானது இரண்டாம் நாளின் மறறொரு சிறப்பு நிகழ்வாகும்.மாநாட்டிற்காக சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைச் சுருக்கங்கள் இரண்டு நாள் அமர்வின் போதும் ஆய்வாளர்களால் வாசிக்கப்படவுள்ளமையும் யாழ்ப்பாண சட்ட மாநாட்டின் சிறப்பம்சங்களில் ஒன்றாகும்.சமகாலப் பிரச்சினைகளினை முன்னிறுத்தியதாக பல்வேறு சட்ட விடயங்களை ஆராய்ந்து அதனூடாக இலங்கையின் வடபிராந்தியத்தின் பொருளாதார, சமூக விடயங்களை வினைத்திறனாக அணுகும் தன்மையிலும் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.