• Sep 04 2026

முள்ளிவாய்க்காலில் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு தயாராகும் யாழ். பல்கலைக்கழகம்?

Aathira / Sep 3rd 2026, 11:22 am
image

முல்லைத்தீவு மாவட்டம், முள்ளிவாய்க்கால் கிழக்குப் பகுதியில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மீன்பிடிக் கற்கைப் பீடத்தை அமைப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ள சுமார் 39 ஏக்கர் காணியை, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி பிரதியமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்தின நேற்று  (02.09.2026) நேரில் பார்வையிட்டார்.

முல்லைத்தீவு மாவட்டத்திற்கான விஜயத்தின் ஒரு பகுதியாக இந்தக் களப் பார்வை இடம்பெற்றது.

இதன்போது, முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ. உமாமகேஸ்வரன், குறித்த காணி தொடர்பான விரிவான விளக்கங்களை பிரதியமைச்சருக்கு வழங்கினார்.

மேலும், காணியின் தற்போதைய நிலைமை, எதிர்காலத்தில் இங்கு மீன்பிடிக் கற்கைப் பீடத்தை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாக களத்தில் கலந்துரையாடப்பட்டது.

இந்தக் களப் பார்வையில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் திலகநாதன் உள்ளிட்ட மேலும் பல அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

முள்ளிவாய்க்காலில் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு தயாராகும் யாழ். பல்கலைக்கழகம் முல்லைத்தீவு மாவட்டம், முள்ளிவாய்க்கால் கிழக்குப் பகுதியில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மீன்பிடிக் கற்கைப் பீடத்தை அமைப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ள சுமார் 39 ஏக்கர் காணியை, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி பிரதியமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்தின நேற்று  (02.09.2026) நேரில் பார்வையிட்டார்.முல்லைத்தீவு மாவட்டத்திற்கான விஜயத்தின் ஒரு பகுதியாக இந்தக் களப் பார்வை இடம்பெற்றது.இதன்போது, முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ. உமாமகேஸ்வரன், குறித்த காணி தொடர்பான விரிவான விளக்கங்களை பிரதியமைச்சருக்கு வழங்கினார்.மேலும், காணியின் தற்போதைய நிலைமை, எதிர்காலத்தில் இங்கு மீன்பிடிக் கற்கைப் பீடத்தை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாக களத்தில் கலந்துரையாடப்பட்டது.இந்தக் களப் பார்வையில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் திலகநாதன் உள்ளிட்ட மேலும் பல அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement