• Apr 03 2025

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ வாக்குமூலம்!

Chithra / Oct 23rd 2024, 10:33 am
image


முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று காலை ஆஜராகியுள்ளார்.

சமீபத்தில் ஹில்டன் ஹோட்டலின் கார் பார்க்கிங்கில் பிஎம்டபிள்யூ கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பான விசாரணை குறித்தே அவர் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் வாக்குமூலம் வழங்கத் தயார் என நேற்று (22) முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தனது சட்டத்தரணி ஊடாக மேன்முறையீட்டு நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஊடகங்களுக்கு கருத்து தெரிவித் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, 

“..என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்… கேள்விகளுக்கு காலம் பதில் சொல்லும்.சத்தியம் வெல்லும்…” எனத் தெரிவித்திருந்தார்.


குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ வாக்குமூலம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று காலை ஆஜராகியுள்ளார்.சமீபத்தில் ஹில்டன் ஹோட்டலின் கார் பார்க்கிங்கில் பிஎம்டபிள்யூ கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பான விசாரணை குறித்தே அவர் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளார்.இது தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் வாக்குமூலம் வழங்கத் தயார் என நேற்று (22) முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தனது சட்டத்தரணி ஊடாக மேன்முறையீட்டு நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.இதேவேளை, ஊடகங்களுக்கு கருத்து தெரிவித் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, “.என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்… கேள்விகளுக்கு காலம் பதில் சொல்லும்.சத்தியம் வெல்லும்…” எனத் தெரிவித்திருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement