• Oct 13 2026

பாம்பும் கீரியும் ஒன்றாகச் சேர்ந்தது போல் சஜித்தும் ரணிலும் இணைந்துள்ளனர் – சுனில் வட்டகல கடும் விமர்சனம்!

Chithra / Oct 13th 2026, 2:35 pm
image


கடந்த காலங்களில் ஒருவருக்கொருவர் எதிராகச் செயற்பட்ட அரசியல் தலைவர்கள், இன்று தமது அரசியல் இருப்பைப் பாதுகாத்துக்கொள்வதற்காக ஒன்றிணைந்து செயற்படுவதாக பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.


கொழும்பில் இன்று (13) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


இதன்போது தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,


"பாரம்பரிய அரசியல் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, மக்கள் நலனை முன்னிறுத்திய புதிய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்குவோம் என மக்களுக்கு வாக்குறுதி வழங்கியிருந்தோம். அந்த வாக்குறுதியை தற்போது நிறைவேற்றியுள்ளோம்.


அதேபோன்று நாட்டின் பொருளாதாரத்தை முறையாக நிர்வகிப்போம் என்ற வாக்குறுதியையும் வழங்கியிருந்தோம்.


கடந்த காலங்களில் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள், ஐந்து வருடங்களும் தங்களது அரசியல் குழுக்களின் தேவைகளுக்காகவே செயற்பட்டன. ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை வெவ்வேறு அரசியல் குழுக்கள் ஒப்பந்தங்களை ஏற்படுத்திக்கொண்டு அதிகாரத்தைப் பகிர்ந்துகொண்டன.


ஆனால், தற்போதைய மக்கள் அரசாங்கத்தின் கீழ் நாட்டின் சட்டம் அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. எவராக இருந்தாலும் சட்டத்திற்கு மேலானவர்களாக இருக்க முடியாது.


இந்நிலையில், கடந்த காலங்களில் ஒருவருக்கொருவர் எதிராகச் செயற்பட்ட அரசியல் குழுக்கள் தற்போது ஒன்றிணைந்து வருகின்றன.


குறிப்பாக, முன்னர் எதிரெதிர் அரசியல் நிலைப்பாடுகளைக் கொண்டிருந்த சஜித் பிரேமதாச மற்றும் ரணில் விக்கிரமசிங்க போன்ற தலைவர்கள் கூட இன்று ஒரே மேடையில் நிற்கின்றனர்.


பாம்பும் கீரியும் ஒரே மரக்கட்டையில் அடித்துச் செல்லப்படுவதைப் போன்று இவர்கள் தற்போது ஒன்றிணைந்துள்ளனர்.


முன்னர் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக எதிரெதிர் அணிகளாகப் பிரிந்து நின்று, அப்பாவி மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற்றவர்கள் இன்று ஒன்றாகச் செயற்படுகின்றனர்.


அன்று ஒருவருக்கொருவர் எதிராகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தவர்கள், இன்று அரசியல் தேவைகளுக்காக ஒன்றிணைந்திருப்பதை மக்கள் அவதானித்து வருகின்றனர்.


அத்துடன், இவர்கள் மீண்டும் அரசியல் ரீதியாக எழுச்சி பெறுவதற்காக இனத்தையும் மதத்தையும் முன்னிறுத்த முயற்சிக்கின்றனர்.


ஆனால், இலங்கையில் வாழும் அனைத்து இனங்களையும் மதங்களையும் சேர்ந்த மக்கள் எமது அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.


எனவே, எமது அரசாங்கத்தின் கீழ் இனவாதத்திற்கும் மதவாதத்திற்கும் எவ்வித இடமும் வழங்கப்படமாட்டாது" என பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.

பாம்பும் கீரியும் ஒன்றாகச் சேர்ந்தது போல் சஜித்தும் ரணிலும் இணைந்துள்ளனர் – சுனில் வட்டகல கடும் விமர்சனம் கடந்த காலங்களில் ஒருவருக்கொருவர் எதிராகச் செயற்பட்ட அரசியல் தலைவர்கள், இன்று தமது அரசியல் இருப்பைப் பாதுகாத்துக்கொள்வதற்காக ஒன்றிணைந்து செயற்படுவதாக பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.கொழும்பில் இன்று (13) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இதன்போது தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,"பாரம்பரிய அரசியல் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, மக்கள் நலனை முன்னிறுத்திய புதிய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்குவோம் என மக்களுக்கு வாக்குறுதி வழங்கியிருந்தோம். அந்த வாக்குறுதியை தற்போது நிறைவேற்றியுள்ளோம்.அதேபோன்று நாட்டின் பொருளாதாரத்தை முறையாக நிர்வகிப்போம் என்ற வாக்குறுதியையும் வழங்கியிருந்தோம்.கடந்த காலங்களில் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள், ஐந்து வருடங்களும் தங்களது அரசியல் குழுக்களின் தேவைகளுக்காகவே செயற்பட்டன. ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை வெவ்வேறு அரசியல் குழுக்கள் ஒப்பந்தங்களை ஏற்படுத்திக்கொண்டு அதிகாரத்தைப் பகிர்ந்துகொண்டன.ஆனால், தற்போதைய மக்கள் அரசாங்கத்தின் கீழ் நாட்டின் சட்டம் அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. எவராக இருந்தாலும் சட்டத்திற்கு மேலானவர்களாக இருக்க முடியாது.இந்நிலையில், கடந்த காலங்களில் ஒருவருக்கொருவர் எதிராகச் செயற்பட்ட அரசியல் குழுக்கள் தற்போது ஒன்றிணைந்து வருகின்றன.குறிப்பாக, முன்னர் எதிரெதிர் அரசியல் நிலைப்பாடுகளைக் கொண்டிருந்த சஜித் பிரேமதாச மற்றும் ரணில் விக்கிரமசிங்க போன்ற தலைவர்கள் கூட இன்று ஒரே மேடையில் நிற்கின்றனர்.பாம்பும் கீரியும் ஒரே மரக்கட்டையில் அடித்துச் செல்லப்படுவதைப் போன்று இவர்கள் தற்போது ஒன்றிணைந்துள்ளனர்.முன்னர் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக எதிரெதிர் அணிகளாகப் பிரிந்து நின்று, அப்பாவி மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற்றவர்கள் இன்று ஒன்றாகச் செயற்படுகின்றனர்.அன்று ஒருவருக்கொருவர் எதிராகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தவர்கள், இன்று அரசியல் தேவைகளுக்காக ஒன்றிணைந்திருப்பதை மக்கள் அவதானித்து வருகின்றனர்.அத்துடன், இவர்கள் மீண்டும் அரசியல் ரீதியாக எழுச்சி பெறுவதற்காக இனத்தையும் மதத்தையும் முன்னிறுத்த முயற்சிக்கின்றனர்.ஆனால், இலங்கையில் வாழும் அனைத்து இனங்களையும் மதங்களையும் சேர்ந்த மக்கள் எமது அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.எனவே, எமது அரசாங்கத்தின் கீழ் இனவாதத்திற்கும் மதவாதத்திற்கும் எவ்வித இடமும் வழங்கப்படமாட்டாது" என பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement