2015 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் பொது வேட்பாளராகப் போட்டியிட்டபோது மக்கள் விடுதலை முன்னணி தமக்கு ஆதரவளித்ததாகவும் அதற்காக அவர்களை மதிப்பதாகவும் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
அந்த நல்லாட்சி அரசாங்கத்தில் அவர்கள் அமைச்சுப் பதவியை வகிக்காவிட்டாலும் பல விடயங்களில் அவர்கள் அரசாங்கத்திற்கு ஆதரவளித்ததாகவும் அவர் கூறினார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் தொகுதி கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எதிர்வரும் தேர்தலில் வெற்றியீட்டக்கூடிய வேலைத்திட்டம் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர்,
இன்னும் சில நாட்களில் நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகளுடன் இணைந்து புதிய அரசியல் கூட்டணியை உருவாக்கவுள்ளதாக தெரிவித்தார்.
மைத்திரிக்கு ஜே.வி.பி செய்த உதவி: காலம் கடந்து வெளியாகும் தகவல். 2015 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் பொது வேட்பாளராகப் போட்டியிட்டபோது மக்கள் விடுதலை முன்னணி தமக்கு ஆதரவளித்ததாகவும் அதற்காக அவர்களை மதிப்பதாகவும் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.அந்த நல்லாட்சி அரசாங்கத்தில் அவர்கள் அமைச்சுப் பதவியை வகிக்காவிட்டாலும் பல விடயங்களில் அவர்கள் அரசாங்கத்திற்கு ஆதரவளித்ததாகவும் அவர் கூறினார்.சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் தொகுதி கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.எதிர்வரும் தேர்தலில் வெற்றியீட்டக்கூடிய வேலைத்திட்டம் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், இன்னும் சில நாட்களில் நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகளுடன் இணைந்து புதிய அரசியல் கூட்டணியை உருவாக்கவுள்ளதாக தெரிவித்தார்.