• Nov 25 2024

தமிழர்கள் மீது தீராப்பகை கொண்ட ஜே.வி.பி; ஆதரிப்பது அர மடைமைத்தனம்! - ஐங்கரநேசன் சுட்டிக்காட்டு

Chithra / Oct 28th 2024, 3:33 pm
image


ஜே.வி.பியினர் தங்களை மார்க்சியவாதிகளாகக் காட்டிக்கொண்டு பௌத்த சிங்கள பேரினவாத நிகழ்ச்சி நிரலையே முன்னெடுத்து வருகின்றனர் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவரும் சனநாயகத் தமிழரசுக் கட்சியின் வேட்பாளருமான பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் சனநாயகத் தமிழரசுக் கூட்டமைப்பில் மாம்பழம் சின்னத்தில் போட்டியிடும் பொ. ஐங்கரநேசன் ஞாயிற்றுக்கிழமை கோண்டாவிலில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்தார். 

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 

இனங்களுக்கிடையே கலைஞர்களின் ஊடாக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் 2003ஆம் ஆண்டு கொழும்பு நகர மண்டபத்தில் தமிழ், சிங்கள கலை இலக்கியவாதிகள் இணைந்து கலைக்கூடல் நிகழ்ச்சியை நடாத்தியிருந்தனர்.

இதனை ஏற்பாடு செய்தவர்களில் நானும் ஒருவன். ஆனால் இன நல்லிணக்கத்தைச் சகிக்கமுடியாத ஜே.வி.பியினர் புத்தபிக்குகள் சகிதம் ஊர்வலமாக வந்து தாக்குதல்களை மேற்கொண்டனர். தமிழர்கள்மீது தீராப்பகை கொண்ட ஜே.வி.பியை தமிழ் மக்களே ஆதரிப்பது அரசியல் மடைமைத்தனமாகும் 

மார்க்சியம் இன மத மொழி பேதங்களைக் கடந்து மனிதர்களை நேசிக்கக் கற்றுக் கொடுக்கும் ஒரு தத்துவம் ஆகும். ஆனால் ரோகண விஜயவீராவின்  மறைவுக்குப் பின்னர் ஜே.வி.பி ஏனைய சிங்களக்  கட்சிகளைப் போன்றே முற்றுமுழுதாக பௌத்த சிங்களப் பேரினவாதக் கட்சியாக மாறிவிட்டது. 

இந்திய - இலங்கை ஒப்பந்த காலப் பகுதியில் அதனை ஆதரித்தமைக்காக சந்திரிகா அம்மையாரின் கணவர் விஜய குமாரதுங்காவின் ஆதரவாளர்கள் பலரையும் விக்கிரமபாகு கருணரட்னவின் ஆதரவாளர்கள் பலரையும் தம் இனம் என்றும் பாராமல் சுட்டுக் கொன்றவர்கள் இவர்கள் தான்.

தமிழர்களின் தாயகமான வடக்கு கிழக்கை நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் துண்டாடியவர்கள் இவர்கள்தான். விடுதலைப் புலிகளை அழித்ததில் அமெரிக்காவின் பங்களிப்புக்காக அமெரிக்கத் தூதரகம் சென்று கைகுலுக்கியவர்களும்  இவர்கள்தான்.  

ஜே.வி.பி இப்போது தேசிய மக்கள் சக்தி என்ற புதிய முகமூடியுடன் தேர்தல் அரசியலில் ஈடுபட்டுவருகிறது. ஜனாதிபதித் தேர்தலின்போது ராஜபக்சாக்களின் மீதும் ரணில் தரப்பின் மீதும்  சிங்கள மக்கள் கொண்டிருக்கும் வெறுப்பு தென்னிலங்கையில் அரசியல் தலைமையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

அந்த மாற்றம் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்குத் தீர்வைத் தரப்போவதில்லை. படித்தவர்கள் சிலர்கூட இதனைப் புரிந்து கொள்ளாமல் தமிழ்க் கட்சிகளின் மீது கொண்டிருக்கும் வெறுப்புக் காரணமாக ஜே.வி.பியை ஆதரிக்கத் தலைப்பட்டிருக்கிறார்கள். 

அமைச்சர் பதவிக்காகத் தமிழ் மக்களை ஜே.வி.பியிடம் அடகு வைப்பதற்கும் சிலர் தயாராக இருக்கிறார்கள். தமிழ் மக்கள் இதனைப் புரிந்துகொண்டு ஜே.வி.பியை வடக்கு கிழக்கில் முற்றாக நிராகரிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.


தமிழர்கள் மீது தீராப்பகை கொண்ட ஜே.வி.பி; ஆதரிப்பது அர மடைமைத்தனம் - ஐங்கரநேசன் சுட்டிக்காட்டு ஜே.வி.பியினர் தங்களை மார்க்சியவாதிகளாகக் காட்டிக்கொண்டு பௌத்த சிங்கள பேரினவாத நிகழ்ச்சி நிரலையே முன்னெடுத்து வருகின்றனர் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவரும் சனநாயகத் தமிழரசுக் கட்சியின் வேட்பாளருமான பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் சனநாயகத் தமிழரசுக் கூட்டமைப்பில் மாம்பழம் சின்னத்தில் போட்டியிடும் பொ. ஐங்கரநேசன் ஞாயிற்றுக்கிழமை கோண்டாவிலில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், இனங்களுக்கிடையே கலைஞர்களின் ஊடாக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் 2003ஆம் ஆண்டு கொழும்பு நகர மண்டபத்தில் தமிழ், சிங்கள கலை இலக்கியவாதிகள் இணைந்து கலைக்கூடல் நிகழ்ச்சியை நடாத்தியிருந்தனர்.இதனை ஏற்பாடு செய்தவர்களில் நானும் ஒருவன். ஆனால் இன நல்லிணக்கத்தைச் சகிக்கமுடியாத ஜே.வி.பியினர் புத்தபிக்குகள் சகிதம் ஊர்வலமாக வந்து தாக்குதல்களை மேற்கொண்டனர். தமிழர்கள்மீது தீராப்பகை கொண்ட ஜே.வி.பியை தமிழ் மக்களே ஆதரிப்பது அரசியல் மடைமைத்தனமாகும் மார்க்சியம் இன மத மொழி பேதங்களைக் கடந்து மனிதர்களை நேசிக்கக் கற்றுக் கொடுக்கும் ஒரு தத்துவம் ஆகும். ஆனால் ரோகண விஜயவீராவின்  மறைவுக்குப் பின்னர் ஜே.வி.பி ஏனைய சிங்களக்  கட்சிகளைப் போன்றே முற்றுமுழுதாக பௌத்த சிங்களப் பேரினவாதக் கட்சியாக மாறிவிட்டது. இந்திய - இலங்கை ஒப்பந்த காலப் பகுதியில் அதனை ஆதரித்தமைக்காக சந்திரிகா அம்மையாரின் கணவர் விஜய குமாரதுங்காவின் ஆதரவாளர்கள் பலரையும் விக்கிரமபாகு கருணரட்னவின் ஆதரவாளர்கள் பலரையும் தம் இனம் என்றும் பாராமல் சுட்டுக் கொன்றவர்கள் இவர்கள் தான்.தமிழர்களின் தாயகமான வடக்கு கிழக்கை நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் துண்டாடியவர்கள் இவர்கள்தான். விடுதலைப் புலிகளை அழித்ததில் அமெரிக்காவின் பங்களிப்புக்காக அமெரிக்கத் தூதரகம் சென்று கைகுலுக்கியவர்களும்  இவர்கள்தான்.  ஜே.வி.பி இப்போது தேசிய மக்கள் சக்தி என்ற புதிய முகமூடியுடன் தேர்தல் அரசியலில் ஈடுபட்டுவருகிறது. ஜனாதிபதித் தேர்தலின்போது ராஜபக்சாக்களின் மீதும் ரணில் தரப்பின் மீதும்  சிங்கள மக்கள் கொண்டிருக்கும் வெறுப்பு தென்னிலங்கையில் அரசியல் தலைமையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.அந்த மாற்றம் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்குத் தீர்வைத் தரப்போவதில்லை. படித்தவர்கள் சிலர்கூட இதனைப் புரிந்து கொள்ளாமல் தமிழ்க் கட்சிகளின் மீது கொண்டிருக்கும் வெறுப்புக் காரணமாக ஜே.வி.பியை ஆதரிக்கத் தலைப்பட்டிருக்கிறார்கள். அமைச்சர் பதவிக்காகத் தமிழ் மக்களை ஜே.வி.பியிடம் அடகு வைப்பதற்கும் சிலர் தயாராக இருக்கிறார்கள். தமிழ் மக்கள் இதனைப் புரிந்துகொண்டு ஜே.வி.பியை வடக்கு கிழக்கில் முற்றாக நிராகரிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement