• Feb 27 2026

மாம்பழ உற்பத்தியில் சாதித்த பெண் அதிபர்; கல்முனை அஸ்-ஸுஹறா வித்தியாலயம் பெருமிதம்!

shanuja / Nov 3rd 2025, 12:44 pm
image

கல்முனை   அஸ்-ஸுஹறா  வித்தியாலயத்தின் அதிபர் எம்.எச்.எஸ்.ஆர்.மஜிதிய்யா, பாடசாலையில் மாம்பழத்தை உற்பத்தி செய்து சாதனை புரிந்துள்ளார். 


மாம்பழ அறுவடையில்  வெற்றி பெறுவதற்கு மாணவர்களின் ஒத்துழைப்பு கிடைத்தமை குறித்து  கல்முனை   அஸ்-ஸுஹறா  வித்தியாலய அதிபர் எம்.எச்.எஸ்.ஆர்.மஜிதிய்யா  நன்றி தெரிவித்துள்ளார்.


கல்முனை  கமு/கமு/அஸ்-ஸுஹறா  வித்தியாலயத்தில் மாம்பழ அறுவடை நிகழ்வு   இன்று(3)   பாடசாலை அதிபர் அதிபர் எம்.எச்.எஸ்.ஆர்.மஜிதிய்யா தலைமையில்  சிறப்பாக பாடசாலை வளாகத்தில் நடைபெற்ற போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


இதன்போது மாணவர்களின் போசாக்கு மற்றும் அவர்களின் உணவு திட்டத்தில் அறுவடை செய்யப்பட்ட மாம்பழங்கள் வழங்கப்படவுள்ளதுடன் இவ்வறுவடை வெற்றி பெற காரணமான இருந்த உதவி அதிபர், ஆசிரியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மாணவர்கள், பழைய மாணவர் சங்கம் , பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு ,பெற்றோர் சங்கம்,அயலவர்கள் ஆகியோருக்கு

நன்றிகளை  தெரிவித்தார்.


மேலும் இப்பாடசாலையில்    சுமார் 100க்கும் அதிகமாக அறுவடை செய்யப்பட்ட டொம் டேசி  மாம்பழ இனங்கள் அதிதிகளால் 04  தடவை  உத்தியோகபூர்வமாக வெட்டப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.


மாம்பழ உற்பத்தியில் சாதித்த பெண் அதிபர்; கல்முனை அஸ்-ஸுஹறா வித்தியாலயம் பெருமிதம் கல்முனை   அஸ்-ஸுஹறா  வித்தியாலயத்தின் அதிபர் எம்.எச்.எஸ்.ஆர்.மஜிதிய்யா, பாடசாலையில் மாம்பழத்தை உற்பத்தி செய்து சாதனை புரிந்துள்ளார். மாம்பழ அறுவடையில்  வெற்றி பெறுவதற்கு மாணவர்களின் ஒத்துழைப்பு கிடைத்தமை குறித்து  கல்முனை   அஸ்-ஸுஹறா  வித்தியாலய அதிபர் எம்.எச்.எஸ்.ஆர்.மஜிதிய்யா  நன்றி தெரிவித்துள்ளார்.கல்முனை  கமு/கமு/அஸ்-ஸுஹறா  வித்தியாலயத்தில் மாம்பழ அறுவடை நிகழ்வு   இன்று(3)   பாடசாலை அதிபர் அதிபர் எம்.எச்.எஸ்.ஆர்.மஜிதிய்யா தலைமையில்  சிறப்பாக பாடசாலை வளாகத்தில் நடைபெற்ற போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.இதன்போது மாணவர்களின் போசாக்கு மற்றும் அவர்களின் உணவு திட்டத்தில் அறுவடை செய்யப்பட்ட மாம்பழங்கள் வழங்கப்படவுள்ளதுடன் இவ்வறுவடை வெற்றி பெற காரணமான இருந்த உதவி அதிபர், ஆசிரியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மாணவர்கள், பழைய மாணவர் சங்கம் , பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு ,பெற்றோர் சங்கம்,அயலவர்கள் ஆகியோருக்குநன்றிகளை  தெரிவித்தார்.மேலும் இப்பாடசாலையில்    சுமார் 100க்கும் அதிகமாக அறுவடை செய்யப்பட்ட டொம் டேசி  மாம்பழ இனங்கள் அதிதிகளால் 04  தடவை  உத்தியோகபூர்வமாக வெட்டப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement