• Nov 25 2024

கனேடியத் தமிழர் பேரவையின் தெருவிழாவை புறக்கணிக்கும் அழைப்பை ஆதரிப்பதாக'கனேடியத் தமிழர் கூட்டு' அறிவிப்பு..!

Sharmi / Aug 24th 2024, 10:58 am
image

கனேடியத் தமிழர் பேரவை(CTC) ஏற்பாடு செய்துள்ள தெருவிழாவைப்(TAMIL FEST) புறக்கணிக்கும் சமூகத்தின் அழைப்பை அக்கறையுள்ள தமிழ்க் கனேடியர்களின் கூட்டாக ஆதரிப்பதாக 'கனேடியத் தமிழர் கூட்டு' அறிவித்துள்ளது.

இது தொடர்பில் அவ் அமைப்பினால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில்,

'கனேடியத் தமிழர் பேரவையின் அண்மைய நடவடிக்கைகள், கனேடியத் தமிழ்ச் சமூகத்தின் நலன்களையும், கவலைகளையும் போதுமான அளவில் பிரதிநிதித்துவப்படுத் தவறிய நிலையில், இந்த முடிவு, எமது கூட்டு அதிருப்தியைப் பிரதிபலிக்கிறது.

பொறுப்புக்கூறல், சீர்திருத்தம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்கு மத்தியில், இந்த நிகழ்வைத் தொடர்ந்து நடத்த முடிவு செய்ததன் மூலம், CTC சமூகத்தின் கவலைகளைப் புறக்கணித்து, தேவையற்ற மோதல்கள், பிளவுகளையும் ஏற்படுத்தும் ஆபத்தைத் தோற்றுவித்துள்ளது.

எதிர்ப்பு, ஆர்ப்பாட்டம் ஆகிய உரிமைகளை நாங்கள் அங்கீகரித்து மதிக்கிறோம். தெருவிழாவில் அதிக பதற்றம், பாதுகாப்புக் கரிசனைகள் ஏற்படக்கூடிய சாத்தியக் கூறுகள் குறித்து கவனத்திற் கொள்ளுமாறு அனைத்துத் தரப்பினரையும் கேட்டுக்கொள்கிறோம். 

இக்கவலைகள் குறித்து, Toronto நகரம், Toronto காவற்துறைத் தரப்புக்களுடன் கூட்டு முற்கூட்டியே எடுத்துரைத்துள்ளது.

எனவே, தெருவிழாவில் பங்கேற்காமல் தவிர்ப்பதன் ஊடாக தெளிவானதும், ஒற்றுமையானதுமான ஒரு செய்தியை வெளிப்படுத்துவதே எமது நோக்கமாகும். 

பதட்டநிலையை அதிகரிக்கக்கூடிய செயல்களைத் தவிர்ப்பதன் ஊடாக பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்குமாறு அனைவரையும் வலியுறுத்துகிறோம்.

உரையாடல், அமைதி, பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் எமது சமூகத்தின் உரிமைகள், நலன்களுக்காக வாதிடுவதில் 'கனேடியத் தமிழர் கூட்டு' உறுதியாக உள்ளது. 

உங்கள் தொடர் ஆதரவுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதுடன், எங்கள் சமூக அமைப்புகளிடம் இருந்து பொறுப்புக்கூறல், வெளிப்படைத்தன்மையை பெறுவதற்கான எங்கள் முயற்சிகளில் அனைவரையும் ஒற்றுமையாக செயற்படுமாறு கேட்டுக்கொள்கிறோம்' என  குறிப்பிடப்பட்டுள்ளது.

கனேடியத் தமிழர் பேரவையின் தெருவிழாவை புறக்கணிக்கும் அழைப்பை ஆதரிப்பதாக'கனேடியத் தமிழர் கூட்டு' அறிவிப்பு. கனேடியத் தமிழர் பேரவை(CTC) ஏற்பாடு செய்துள்ள தெருவிழாவைப்(TAMIL FEST) புறக்கணிக்கும் சமூகத்தின் அழைப்பை அக்கறையுள்ள தமிழ்க் கனேடியர்களின் கூட்டாக ஆதரிப்பதாக 'கனேடியத் தமிழர் கூட்டு' அறிவித்துள்ளது.இது தொடர்பில் அவ் அமைப்பினால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில்,'கனேடியத் தமிழர் பேரவையின் அண்மைய நடவடிக்கைகள், கனேடியத் தமிழ்ச் சமூகத்தின் நலன்களையும், கவலைகளையும் போதுமான அளவில் பிரதிநிதித்துவப்படுத் தவறிய நிலையில், இந்த முடிவு, எமது கூட்டு அதிருப்தியைப் பிரதிபலிக்கிறது.பொறுப்புக்கூறல், சீர்திருத்தம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்கு மத்தியில், இந்த நிகழ்வைத் தொடர்ந்து நடத்த முடிவு செய்ததன் மூலம், CTC சமூகத்தின் கவலைகளைப் புறக்கணித்து, தேவையற்ற மோதல்கள், பிளவுகளையும் ஏற்படுத்தும் ஆபத்தைத் தோற்றுவித்துள்ளது.எதிர்ப்பு, ஆர்ப்பாட்டம் ஆகிய உரிமைகளை நாங்கள் அங்கீகரித்து மதிக்கிறோம். தெருவிழாவில் அதிக பதற்றம், பாதுகாப்புக் கரிசனைகள் ஏற்படக்கூடிய சாத்தியக் கூறுகள் குறித்து கவனத்திற் கொள்ளுமாறு அனைத்துத் தரப்பினரையும் கேட்டுக்கொள்கிறோம். இக்கவலைகள் குறித்து, Toronto நகரம், Toronto காவற்துறைத் தரப்புக்களுடன் கூட்டு முற்கூட்டியே எடுத்துரைத்துள்ளது.எனவே, தெருவிழாவில் பங்கேற்காமல் தவிர்ப்பதன் ஊடாக தெளிவானதும், ஒற்றுமையானதுமான ஒரு செய்தியை வெளிப்படுத்துவதே எமது நோக்கமாகும். பதட்டநிலையை அதிகரிக்கக்கூடிய செயல்களைத் தவிர்ப்பதன் ஊடாக பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்குமாறு அனைவரையும் வலியுறுத்துகிறோம்.உரையாடல், அமைதி, பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் எமது சமூகத்தின் உரிமைகள், நலன்களுக்காக வாதிடுவதில் 'கனேடியத் தமிழர் கூட்டு' உறுதியாக உள்ளது. உங்கள் தொடர் ஆதரவுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதுடன், எங்கள் சமூக அமைப்புகளிடம் இருந்து பொறுப்புக்கூறல், வெளிப்படைத்தன்மையை பெறுவதற்கான எங்கள் முயற்சிகளில் அனைவரையும் ஒற்றுமையாக செயற்படுமாறு கேட்டுக்கொள்கிறோம்' என  குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement