திருகோணமலை, கந்தளாய் பேராறு சதுர்வேத மங்களபுர சிவனாலயத்தின் வருடாந்த பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.
மங்களகரமான ஆடி மாதம் 31ஆம் நாளான 16.08.2026 ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணியளவில் கொடியேற்ற வைபவம் இடம்பெற்றதுடன், அதனைத் தொடர்ந்து தினமும் பல்வேறு பூஜை வழிபாடுகள் மற்றும் திருவிழா நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.
இதன்படி, பத்தாவது திருவிழா நேற்று (25) சிறப்பாக நடைபெற்றது. பிரம்மோற்சவ விழாவின் பத்து நாட்களிலும் பக்தர்களுக்காக அன்னதானம் வழங்கப்பட்டதுடன், ஐநூறுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
நேற்று (26) தீர்த்தோற்சவமும், மாலை கொடியிறக்க வைபவமும் நடைபெற்றது
இதனைத் தொடர்ந்து இன்று (27) சங்காபிஷேக நிகழ்வும், வைரவர் மடை நிகழ்வும் இடம்பெற்று இவ்வாண்டுக்கான பிரம்மோற்சவ விழா நிறைவு பெறவுள்ளது.
குருக்கள் செல்வ பிரசாத் அவர்களின் தலைமையின் கீழ் இவ்வாண்டுக்கான பிரம்மோற்சவ விழா சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
கந்தளாய் பேராறு சதுர்வேத மங்களபுர சிவனாலய பிரம்மோற்சவ விழா திருகோணமலை, கந்தளாய் பேராறு சதுர்வேத மங்களபுர சிவனாலயத்தின் வருடாந்த பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.மங்களகரமான ஆடி மாதம் 31ஆம் நாளான 16.08.2026 ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணியளவில் கொடியேற்ற வைபவம் இடம்பெற்றதுடன், அதனைத் தொடர்ந்து தினமும் பல்வேறு பூஜை வழிபாடுகள் மற்றும் திருவிழா நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.இதன்படி, பத்தாவது திருவிழா நேற்று (25) சிறப்பாக நடைபெற்றது. பிரம்மோற்சவ விழாவின் பத்து நாட்களிலும் பக்தர்களுக்காக அன்னதானம் வழங்கப்பட்டதுடன், ஐநூறுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.நேற்று (26) தீர்த்தோற்சவமும், மாலை கொடியிறக்க வைபவமும் நடைபெற்றதுஇதனைத் தொடர்ந்து இன்று (27) சங்காபிஷேக நிகழ்வும், வைரவர் மடை நிகழ்வும் இடம்பெற்று இவ்வாண்டுக்கான பிரம்மோற்சவ விழா நிறைவு பெறவுள்ளது.குருக்கள் செல்வ பிரசாத் அவர்களின் தலைமையின் கீழ் இவ்வாண்டுக்கான பிரம்மோற்சவ விழா சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.