• May 22 2026

கபில சந்திரசேன விவகாரம்:பணத்தைப் பெற்றுக்கொண்டு பிணை நின்ற நால்வரும் நீதிமன்றால் பிணையில் விடுவிப்பு!

Ziya / May 21st 2026, 12:17 pm
image

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி மறைந்த கபில சந்திரசேனவுக்கு நீதிமன்றத்தில் பிணை நிற்பதற்காகப் பணத்தைப் பெற்றுக்கொண்டனர் என்று குற்றம் சாட்டப்பட்ட நான்கு சந்தேகநபர்களையும் பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு மேலதிக நீதிவான் லஹிரு சில்வா நேற்று உத்தரவிட்டுள்ளார்.


இதன்படி, சந்தேகநபர்கள் நால்வரும் தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டதோடு, அவர்களில் ஒரு சந்தேகநபருக்கு வெளிநாட்டுப் பயணத் தடையும் விதிக்கப்பட்டது.


பிணைதாரர்களின் வதிவிடத்தை உறுதிப்படுத்தும் கிராம உத்தியோகத்தர் சான்றிதழ்கள் மற்றும் சொத்து விவர ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நீதிவான் இதன்போது உத்தரவிட்டார்.


கடந்த ஜனவரி முதல் மே 2026 வரையிலான காலப்பகுதிக்குள், இந்த விவகாரத்துடன் தொடர்புடைய இரு சந்தேகநபர்கள், நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக வெவ்வேறு பெயர்களில் 17 கிராம உத்தியோகத்தர் சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டுள்ளனர் என்று கெசல்வத்தை பொலிஸார் நீதிமன்றத்துக்குத் தெரிவித்தனர்.


எனினும், சந்தேகநபர்கள் சார்பாக முன்னிலையான சட்டத்தரணி வாதிடுகையில், தனது கட்சிக்காரர்களுக்கு எதிராக இதுவரை எவ்வித குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படாத நிலையிலேயே அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர் என்று சுட்டிக்காட்டினார்.


இருதரப்பு சமர்ப்பிப்புகளையும் பரிசீலித்த மேலதிக நீதிவான், சந்தேகநபர்களைப் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டதுடன், வழக்கை வரும் ஜூன் மாதம் 25ஆம் திகதி மீண்டும் அழைப்பதற்கும் உத்தரவிட்டார்.

கபில சந்திரசேன விவகாரம்:பணத்தைப் பெற்றுக்கொண்டு பிணை நின்ற நால்வரும் நீதிமன்றால் பிணையில் விடுவிப்பு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி மறைந்த கபில சந்திரசேனவுக்கு நீதிமன்றத்தில் பிணை நிற்பதற்காகப் பணத்தைப் பெற்றுக்கொண்டனர் என்று குற்றம் சாட்டப்பட்ட நான்கு சந்தேகநபர்களையும் பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு மேலதிக நீதிவான் லஹிரு சில்வா நேற்று உத்தரவிட்டுள்ளார்.இதன்படி, சந்தேகநபர்கள் நால்வரும் தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டதோடு, அவர்களில் ஒரு சந்தேகநபருக்கு வெளிநாட்டுப் பயணத் தடையும் விதிக்கப்பட்டது.பிணைதாரர்களின் வதிவிடத்தை உறுதிப்படுத்தும் கிராம உத்தியோகத்தர் சான்றிதழ்கள் மற்றும் சொத்து விவர ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நீதிவான் இதன்போது உத்தரவிட்டார்.கடந்த ஜனவரி முதல் மே 2026 வரையிலான காலப்பகுதிக்குள், இந்த விவகாரத்துடன் தொடர்புடைய இரு சந்தேகநபர்கள், நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக வெவ்வேறு பெயர்களில் 17 கிராம உத்தியோகத்தர் சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டுள்ளனர் என்று கெசல்வத்தை பொலிஸார் நீதிமன்றத்துக்குத் தெரிவித்தனர்.எனினும், சந்தேகநபர்கள் சார்பாக முன்னிலையான சட்டத்தரணி வாதிடுகையில், தனது கட்சிக்காரர்களுக்கு எதிராக இதுவரை எவ்வித குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படாத நிலையிலேயே அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர் என்று சுட்டிக்காட்டினார்.இருதரப்பு சமர்ப்பிப்புகளையும் பரிசீலித்த மேலதிக நீதிவான், சந்தேகநபர்களைப் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டதுடன், வழக்கை வரும் ஜூன் மாதம் 25ஆம் திகதி மீண்டும் அழைப்பதற்கும் உத்தரவிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement