• Apr 27 2024

கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் 60 வைத்தியர்களுக்கு பற்றாக்குறை..!

Chithra / Mar 5th 2024, 10:43 am
image

Advertisement


காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் 60 வைத்தியர்கள் மற்றும் 250 கனிஷ்ட ஊழியர்களின் பற்றாக்குறை காணப்படுவதாக கராப்பிட்டிய வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் எஸ்.பி.எம்.ரங்கா தெரிவித்துள்ளார்.

கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு 550 வைத்தியர்கள் இருக்க வேண்டிய நிலையில் தற்போது 490 வைத்தியர்களே இருப்பதாக வைத்தியசாலை பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

வைத்தியசாலையின் எலும்பியல் மற்றும் புற்றுநோய் சத்திரசிகிச்சை பிரிவுகளுக்கும் அவசர சிகிச்சைப் பிரிவுக்கும் வைத்தியர்கள் பற்றாக்குறை நிலவுவதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நிபுணத்துவ வைத்தியர்களுக்கு தட்டுப்பாடு இல்லை எனவும், தேவையான வைத்தியர்கள் மற்றும் இளநிலை பணியாளர்களை சுகாதார அமைச்சினால் வழங்க வேண்டும் எனவும் வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவிக்கின்றார்.

கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் 60 வைத்தியர்களுக்கு பற்றாக்குறை. காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் 60 வைத்தியர்கள் மற்றும் 250 கனிஷ்ட ஊழியர்களின் பற்றாக்குறை காணப்படுவதாக கராப்பிட்டிய வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் எஸ்.பி.எம்.ரங்கா தெரிவித்துள்ளார்.கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு 550 வைத்தியர்கள் இருக்க வேண்டிய நிலையில் தற்போது 490 வைத்தியர்களே இருப்பதாக வைத்தியசாலை பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.வைத்தியசாலையின் எலும்பியல் மற்றும் புற்றுநோய் சத்திரசிகிச்சை பிரிவுகளுக்கும் அவசர சிகிச்சைப் பிரிவுக்கும் வைத்தியர்கள் பற்றாக்குறை நிலவுவதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.நிபுணத்துவ வைத்தியர்களுக்கு தட்டுப்பாடு இல்லை எனவும், தேவையான வைத்தியர்கள் மற்றும் இளநிலை பணியாளர்களை சுகாதார அமைச்சினால் வழங்க வேண்டும் எனவும் வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவிக்கின்றார்.

Advertisement

Advertisement

Advertisement