• Dec 06 2024

காத்தான்குடி பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை- 23 பேர் கைது..!

Sharmi / Aug 28th 2024, 10:15 am
image

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் 'யுத்திய' போதை ஒழிப்பு திட்டத்தின் கீழ் காத்தான்குடி பொலிசார் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது 250 லீற்றர்  கசிப்புடன் 22 பேரும் ஹசீஸ் போதைப் பொருளுடன் ஒருவருமாக 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஜி. கஜநாயக்கா தெரிவித்தார் 

காத்தான்குடி, ஆரையம்பதி, புதுக்குடியிருப்பு ,நாவற்குடா, உட்பட காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் பொலிசார் நடாத்திய திடீர் சுற்றி வளைப்பு தேடுதல்களின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அதேவேளை, கர்பலா பிரதேசத்தில் வைத்து ஹசீஸ் போதை பொருளுடன் 63 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


காத்தான்குடி பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை- 23 பேர் கைது. மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் 'யுத்திய' போதை ஒழிப்பு திட்டத்தின் கீழ் காத்தான்குடி பொலிசார் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது 250 லீற்றர்  கசிப்புடன் 22 பேரும் ஹசீஸ் போதைப் பொருளுடன் ஒருவருமாக 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஜி. கஜநாயக்கா தெரிவித்தார் காத்தான்குடி, ஆரையம்பதி, புதுக்குடியிருப்பு ,நாவற்குடா, உட்பட காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் பொலிசார் நடாத்திய திடீர் சுற்றி வளைப்பு தேடுதல்களின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேவேளை, கர்பலா பிரதேசத்தில் வைத்து ஹசீஸ் போதை பொருளுடன் 63 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement