கட்டுநாயக்க விமான நிலைய வருகை தளம், பயணிகளின் வசதிக்காக மறுவடிவமைப்புக்கு உட்படுத்தப்படவுள்ளது. குறிப்பாக இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், இந்த மேம்படுத்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் லிமிடெட், எயார் சீஃப் மார்ஷல் (ஓய்வு) மற்றும் தலைவர் ஹர்ஷ அபேவிக்ரம ஆகியோர் சுற்றுலாப் பயணிகளின் வருகையின் நிலையான அதிகரிப்பிற்குப் பதிலளிக்கும் வகையில் அபிவிருத்திகளை ஆரம்பிக்கவுள்ளதாகக் கூறினர்.
நெரிசலைக் குறைக்கத் தானியங்கி பணம் செலுத்தும் இயந்திரங்களின் எண்ணிக்கையை இடமாற்றம் செய்தல் மற்றும் அதிகரித்தல்,
மிகவும் விசாலமான மற்றும் வரவேற்கத்தக்கச் சூழலை உருவாக்கப் பயணிகள் வருகை தரும் பிரதான பகுதியை விரிவுபடுத்துதல்,
சுற்றுலாப் பயணிகளுக்கு உதவ ஒரு மைய பயணத் தகவல் வழங்கும் பிரிவை நிறுவுதல் ஆகியவை மேற்கொள்ளப்படும்.
புதிய மறுவடிவமைப்பில் காத்திருப்பு நேரத்தைக் குறைக்கத் தானியங்கி பணம் செலுத்தும் இயந்திரங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு மற்றும் இலங்கை சுற்றுலா பயணத் தகவல் வழங்கும் பிரிவைப் பிரதான மைய இடத்திற்கு மாற்றுதல் ஆகியவை உள்ளடங்கும்.
2024 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டில், இலங்கை சுற்றுலாப் பயணிகளின் வருகையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் கண்டுள்ளது, மேலும் 2025 ஆம் ஆண்டு வரை அந்த அதிகரிப்பு தொடர்கிறது.
சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு விஜயம் செய்ததைத் தொடர்ந்து, பயணிகளின் எண்ணிக்கையைச் சிறப்பாகச் சமாளிக்கப் பிரதான பகுதியை மறுவடிவமைப்பு செய்து விரிவுபடுத்துவதற்கான திட்டங்களைத் தொடங்கியுள்ளதாக அதன் தலைவர் கூறினார்.
பயணிகளின் வசதிக்காக மறுவடிவமைக்கப்படும் கட்டுநாயக்க விமான நிலைய வருகைத்தளம் கட்டுநாயக்க விமான நிலைய வருகை தளம், பயணிகளின் வசதிக்காக மறுவடிவமைப்புக்கு உட்படுத்தப்படவுள்ளது. குறிப்பாக இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், இந்த மேம்படுத்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் லிமிடெட், எயார் சீஃப் மார்ஷல் (ஓய்வு) மற்றும் தலைவர் ஹர்ஷ அபேவிக்ரம ஆகியோர் சுற்றுலாப் பயணிகளின் வருகையின் நிலையான அதிகரிப்பிற்குப் பதிலளிக்கும் வகையில் அபிவிருத்திகளை ஆரம்பிக்கவுள்ளதாகக் கூறினர். நெரிசலைக் குறைக்கத் தானியங்கி பணம் செலுத்தும் இயந்திரங்களின் எண்ணிக்கையை இடமாற்றம் செய்தல் மற்றும் அதிகரித்தல், மிகவும் விசாலமான மற்றும் வரவேற்கத்தக்கச் சூழலை உருவாக்கப் பயணிகள் வருகை தரும் பிரதான பகுதியை விரிவுபடுத்துதல், சுற்றுலாப் பயணிகளுக்கு உதவ ஒரு மைய பயணத் தகவல் வழங்கும் பிரிவை நிறுவுதல் ஆகியவை மேற்கொள்ளப்படும். புதிய மறுவடிவமைப்பில் காத்திருப்பு நேரத்தைக் குறைக்கத் தானியங்கி பணம் செலுத்தும் இயந்திரங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு மற்றும் இலங்கை சுற்றுலா பயணத் தகவல் வழங்கும் பிரிவைப் பிரதான மைய இடத்திற்கு மாற்றுதல் ஆகியவை உள்ளடங்கும். 2024 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டில், இலங்கை சுற்றுலாப் பயணிகளின் வருகையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் கண்டுள்ளது, மேலும் 2025 ஆம் ஆண்டு வரை அந்த அதிகரிப்பு தொடர்கிறது. சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு விஜயம் செய்ததைத் தொடர்ந்து, பயணிகளின் எண்ணிக்கையைச் சிறப்பாகச் சமாளிக்கப் பிரதான பகுதியை மறுவடிவமைப்பு செய்து விரிவுபடுத்துவதற்கான திட்டங்களைத் தொடங்கியுள்ளதாக அதன் தலைவர் கூறினார்.