• Nov 12 2024

வயநாடு சீரமைப்பு பணிக்கு 2 ஆயிரம் கோடி கேட்கும் கேரளா

Anaath / Aug 10th 2024, 10:49 am
image

வயநாடு நிலசரிவு சீரமைப்புக்கு சீரமைப்பு பணிக்கு 2 ஆயிரம் கோடி தேவைப்படுவதாக மத்திய அரசிடம் கோரியுள்ளதாக மாநில பொதுப்பணித்துறை மந்திரி மற்றும்  வனத்துறை மந்திரி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

நிலச்சரிவால்  நிலைகுலைந்துள்ள வயநாட்டில் நிவாரணப்பணிகள் முழுவீச்சில் நடந்து வரும் நிலையில் இந்த பணிகளை மாநில பொதுப்பணித்துறை மந்திரி முகமது ரியாஸ் மற்றும் வனத்துறை மந்திரி சசீதரன் ஆகியோர் பார்வையிட்ட்டுள்ளதுடன் இதன் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளார்கள்.

குறித்த விடயம் தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,  'வயநாட்டில் பேரிடர் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட மத்தியக்குழுவிடம் மறுசீரமைப்பு பணிகளுக்காக உடனடியாக நிதி தேவை என கோரிக்கை வைத்திருக்கிறோம். நிலச்சரிவு பாதித்த பகுதிகளை மறுசீரமைப்பதற்காக ரூ.2 ஆயிரம் கோடியை மத்திய அரசிடம் கோரியுள்ளோம்' என தெரிவித்தனர்.

அத்துடன் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களை வீடுகளில் குடியமர்த்தும் பணி விரைவில் தொடங்கும் என கூறிய அவர்கள், இதற்காக அரசு குடியிருப்பு உள்பட 125 வீடுகள் அடையாளம் காணப்பட்டு உள்ளன என்றும் தெரிவித்துடன்  வயநாட்டில் தூய்மைப்பணிகள் உடனடியாக தொடங்க வேண்டும் எனவும், இதற்கு மட்டுமே 90 நாட்கள் ஆகும் எனவும் தெரிவித்துள்ளனர்

வயநாடு சீரமைப்பு பணிக்கு 2 ஆயிரம் கோடி கேட்கும் கேரளா வயநாடு நிலசரிவு சீரமைப்புக்கு சீரமைப்பு பணிக்கு 2 ஆயிரம் கோடி தேவைப்படுவதாக மத்திய அரசிடம் கோரியுள்ளதாக மாநில பொதுப்பணித்துறை மந்திரி மற்றும்  வனத்துறை மந்திரி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.நிலச்சரிவால்  நிலைகுலைந்துள்ள வயநாட்டில் நிவாரணப்பணிகள் முழுவீச்சில் நடந்து வரும் நிலையில் இந்த பணிகளை மாநில பொதுப்பணித்துறை மந்திரி முகமது ரியாஸ் மற்றும் வனத்துறை மந்திரி சசீதரன் ஆகியோர் பார்வையிட்ட்டுள்ளதுடன் இதன் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளார்கள்.குறித்த விடயம் தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,  'வயநாட்டில் பேரிடர் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட மத்தியக்குழுவிடம் மறுசீரமைப்பு பணிகளுக்காக உடனடியாக நிதி தேவை என கோரிக்கை வைத்திருக்கிறோம். நிலச்சரிவு பாதித்த பகுதிகளை மறுசீரமைப்பதற்காக ரூ.2 ஆயிரம் கோடியை மத்திய அரசிடம் கோரியுள்ளோம்' என தெரிவித்தனர்.அத்துடன் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களை வீடுகளில் குடியமர்த்தும் பணி விரைவில் தொடங்கும் என கூறிய அவர்கள், இதற்காக அரசு குடியிருப்பு உள்பட 125 வீடுகள் அடையாளம் காணப்பட்டு உள்ளன என்றும் தெரிவித்துடன்  வயநாட்டில் தூய்மைப்பணிகள் உடனடியாக தொடங்க வேண்டும் எனவும், இதற்கு மட்டுமே 90 நாட்கள் ஆகும் எனவும் தெரிவித்துள்ளனர்

Advertisement

Advertisement

Advertisement