• Oct 09 2024

இலங்கையில் நடைமுறையில் இருப்பது ஜனாதிபதியின் அறிவிப்பா அல்லது கலால் திணைக்கள ஆணையாளரின் அறிவிப்பா- கேசவதாசன் கேள்வி

Sharmi / Oct 8th 2024, 5:16 pm
image

Advertisement

ஜனாதிபதியின் அறிவிப்பை கேள்விக்குட்படுத்தும் வகையில் கலால் வரித் திணைக்கள ஆணையாளர், பிரதேச செயலர்களுக்கு எச்சரிக்கை விடுக்கின்ற வகையில், மதுபானசாலைகளுக்கு அனுமதி வழங்குமாறு பணிப்புரை விடுத்துள்ளார். இலங்கையில் நடைமுறையில் இருப்பது ஜனாதிபதியின் அறிவிப்பா அல்லது கலால் திணைக்கள ஆணையாளரது அறிவிப்பா என வடபிரதேச நல்லொழுக்க சம்மதனத்தின் செயற்பாட்டாளர் கேசவதாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சங்கானையில் நேற்றையதினம்(07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சங்கானையில் உள்ள தபாற் கந்தோருக்கு அருகாமையில் மதுபானசாலை ஒன்று அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. 

அண்மையில் கலால் திணைக்களம் சங்கானை பிரதேச செயலகத்துக்கு வந்து விசாரணை ஒன்றினை நடாத்தி இருந்தது. 

இந்த விசாரணையின்போது பொதுமக்களும், பொது அமைப்புகளும் தெளிவான விடயங்களை குறிப்பிட்டிருந்தார்கள்

அதாவது அந்த பகுதியில் இருந்து அண்ணளவாக 500 மீட்டர்களுக்குள் பாடசாலை இருப்பதுவும், அந்த மதுபான சாலை அமைக்கவுள்ள இடத்திற்கு நேரெதிராக தபாற்கந்தோர் இருப்பதும், மக்கள் செறிந்து வாழும் இடம் என்பதுவும், ஒரு பிரதான கல்வி நிலையம் அருகாமையில் உள்ளதுவும், மத ஸ்தலங்கள் உள்ளமையும் சுட்டிக்காட்டப்பட்டது.

இவ்வாறு இருந்தும் கூட, நாட்டில் ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்பட்டு, மதுபானசாலைகளுக்கான அனுமதிகள் இரத்துச் செய்யப்பட்டும் கூட, மதுபானசாலைக்கு அனுமதி கொடுக்குமாறு கோரி கலால் திணைக்களத்தினால் சங்கானை பிரதேச செயலருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது.

ஜனாதிபதியின் அறிவிப்பு இலங்கையில் நடைமுறையில் இருக்கின்றதா? அல்லது கலால் திணைக்களத்தினால் அறிவிப்பு நடைமுறையில் இருக்கின்றதா? இதனால் அரசாங்க அதிகாரிகளுக்கு இடையிலும் மக்களுக்கு இடையிலும் முரண்பாடு வருகின்றது. 

இந்தக் காலப்பகுதியில் போதைப்பொருள் மற்றும் மதுபான பாவனை அதிகரித்து காணப்படுகிறது. 

மாலை நேரங்களில் மதுபான சாலைகளுக்கு அருகாமையில் உள்ள வீதிகளில் செல்வதற்கு பெண்களும்,  சிறுவர்களும், மாணவர்களும் பீதி நிலையில் காணப்படுகின்றனர். 

இப்படியான சூழ்நிலையில் மேன்மேலும் இந்த மதுபான சாலைகளை திறந்து மாணவர் சமூகத்தையும் இளைஞர்களையும் சீரழிக்கும் வேலைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

மதுபானசாலைகளுக்கு அனுமதி வழங்கப்படக் கூடாது என ஜனாதிபதியால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இந்த காலப்பகுதியில் மதுபானசாலை அமைப்பதை பொதுமக்களாகிய நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.

சங்கானையிலுள்ள குளத்துக்கு முன்பாக ஒரு மதுபானசாலை உள்ளது. தொட்டிலடி வீதியில் ஒரு மதுபான சாலை உள்ளது. 

சங்கானையில் உள்ள உணவகத்துக்கு அண்மையில் ஒரு மதுபானசாலை உள்ளது. சங்கானையை அண்மித்த பகுதியான கட்டுடையில் ஒரு மதுபானசாலை உள்ளது. நவாலி வீதியில் ஒரு மதுபானசாலை உள்ளது. மூளாயில் ஒரு மதுபான சாலை உள்ளது இவ்வாறு அருகாமையில் மதுபான சாலைகள் பல உள்ள நிலையில் மேலும் மதுபானசாலை தேவை தானா?

எனவே, உரிய அதிகாரிகள் இதனை கருத்தில் கொண்டு குறித்த மதுபானசாலையை அமைப்பதற்கு அனுமதி வழங்கக் கூடாது என அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கையில் நடைமுறையில் இருப்பது ஜனாதிபதியின் அறிவிப்பா அல்லது கலால் திணைக்கள ஆணையாளரின் அறிவிப்பா- கேசவதாசன் கேள்வி ஜனாதிபதியின் அறிவிப்பை கேள்விக்குட்படுத்தும் வகையில் கலால் வரித் திணைக்கள ஆணையாளர், பிரதேச செயலர்களுக்கு எச்சரிக்கை விடுக்கின்ற வகையில், மதுபானசாலைகளுக்கு அனுமதி வழங்குமாறு பணிப்புரை விடுத்துள்ளார். இலங்கையில் நடைமுறையில் இருப்பது ஜனாதிபதியின் அறிவிப்பா அல்லது கலால் திணைக்கள ஆணையாளரது அறிவிப்பா என வடபிரதேச நல்லொழுக்க சம்மதனத்தின் செயற்பாட்டாளர் கேசவதாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.சங்கானையில் நேற்றையதினம்(07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.சங்கானையில் உள்ள தபாற் கந்தோருக்கு அருகாமையில் மதுபானசாலை ஒன்று அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அண்மையில் கலால் திணைக்களம் சங்கானை பிரதேச செயலகத்துக்கு வந்து விசாரணை ஒன்றினை நடாத்தி இருந்தது. இந்த விசாரணையின்போது பொதுமக்களும், பொது அமைப்புகளும் தெளிவான விடயங்களை குறிப்பிட்டிருந்தார்கள்அதாவது அந்த பகுதியில் இருந்து அண்ணளவாக 500 மீட்டர்களுக்குள் பாடசாலை இருப்பதுவும், அந்த மதுபான சாலை அமைக்கவுள்ள இடத்திற்கு நேரெதிராக தபாற்கந்தோர் இருப்பதும், மக்கள் செறிந்து வாழும் இடம் என்பதுவும், ஒரு பிரதான கல்வி நிலையம் அருகாமையில் உள்ளதுவும், மத ஸ்தலங்கள் உள்ளமையும் சுட்டிக்காட்டப்பட்டது.இவ்வாறு இருந்தும் கூட, நாட்டில் ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்பட்டு, மதுபானசாலைகளுக்கான அனுமதிகள் இரத்துச் செய்யப்பட்டும் கூட, மதுபானசாலைக்கு அனுமதி கொடுக்குமாறு கோரி கலால் திணைக்களத்தினால் சங்கானை பிரதேச செயலருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது.ஜனாதிபதியின் அறிவிப்பு இலங்கையில் நடைமுறையில் இருக்கின்றதா அல்லது கலால் திணைக்களத்தினால் அறிவிப்பு நடைமுறையில் இருக்கின்றதா இதனால் அரசாங்க அதிகாரிகளுக்கு இடையிலும் மக்களுக்கு இடையிலும் முரண்பாடு வருகின்றது. இந்தக் காலப்பகுதியில் போதைப்பொருள் மற்றும் மதுபான பாவனை அதிகரித்து காணப்படுகிறது. மாலை நேரங்களில் மதுபான சாலைகளுக்கு அருகாமையில் உள்ள வீதிகளில் செல்வதற்கு பெண்களும்,  சிறுவர்களும், மாணவர்களும் பீதி நிலையில் காணப்படுகின்றனர். இப்படியான சூழ்நிலையில் மேன்மேலும் இந்த மதுபான சாலைகளை திறந்து மாணவர் சமூகத்தையும் இளைஞர்களையும் சீரழிக்கும் வேலைகள் மேற்கொள்ளப்படுகின்றன.மதுபானசாலைகளுக்கு அனுமதி வழங்கப்படக் கூடாது என ஜனாதிபதியால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த காலப்பகுதியில் மதுபானசாலை அமைப்பதை பொதுமக்களாகிய நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.சங்கானையிலுள்ள குளத்துக்கு முன்பாக ஒரு மதுபானசாலை உள்ளது. தொட்டிலடி வீதியில் ஒரு மதுபான சாலை உள்ளது. சங்கானையில் உள்ள உணவகத்துக்கு அண்மையில் ஒரு மதுபானசாலை உள்ளது. சங்கானையை அண்மித்த பகுதியான கட்டுடையில் ஒரு மதுபானசாலை உள்ளது. நவாலி வீதியில் ஒரு மதுபானசாலை உள்ளது. மூளாயில் ஒரு மதுபான சாலை உள்ளது இவ்வாறு அருகாமையில் மதுபான சாலைகள் பல உள்ள நிலையில் மேலும் மதுபானசாலை தேவை தானாஎனவே, உரிய அதிகாரிகள் இதனை கருத்தில் கொண்டு குறித்த மதுபானசாலையை அமைப்பதற்கு அனுமதி வழங்கக் கூடாது என அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement