திருகோணமலை கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள உப்பாறு பகுதி கரையோரம் கடலரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளது.
அலையின் வேகம் அதிகரிப்பு காரணமாக கடல் நீரானது வீதியை அண்டி உட்புகுவதனை அவதானிக்க முடிகிறது.
குறித்த பகுதியின் கரையோரம் மிக நீண்ட காலமாக பாதிப்படைந்துள்ளதால் கரையோரத்தை அண்டிய குடியிருப்பாளர்கள் பெரும் அச்சத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
குறித்த பகுதியில் கடல் அரிப்புக்கான காரணமாக மண் அகழ்வு , திட்டமிடப்படாத சட்ட விரோத கரையோர கட்டுமாண பணிகள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிண்ணியா மட்டக்களப்பு பிரதான வீதி சிறுவர் பூங்கா ஊடாக உப்பாறு வரையான கரையோரம் இவ்வாறு கடலரிப்புக்கு இரையாகியுள்ளது.
கிண்ணியா உப்பாறு கரையோரம் கடலரிப்பால் பாதிப்பு திருகோணமலை கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள உப்பாறு பகுதி கரையோரம் கடலரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளது. அலையின் வேகம் அதிகரிப்பு காரணமாக கடல் நீரானது வீதியை அண்டி உட்புகுவதனை அவதானிக்க முடிகிறது. குறித்த பகுதியின் கரையோரம் மிக நீண்ட காலமாக பாதிப்படைந்துள்ளதால் கரையோரத்தை அண்டிய குடியிருப்பாளர்கள் பெரும் அச்சத்தை எதிர்நோக்கியுள்ளனர்.குறித்த பகுதியில் கடல் அரிப்புக்கான காரணமாக மண் அகழ்வு , திட்டமிடப்படாத சட்ட விரோத கரையோர கட்டுமாண பணிகள் என எதிர்பார்க்கப்படுகிறது.கிண்ணியா மட்டக்களப்பு பிரதான வீதி சிறுவர் பூங்கா ஊடாக உப்பாறு வரையான கரையோரம் இவ்வாறு கடலரிப்புக்கு இரையாகியுள்ளது.