• Sep 28 2024

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி வழக்கு- இறுதி அறிக்கை சமர்ப்பிப்பு- சட்டத்தரணி நிறஞ்சன் தெரிவிப்பு..!

Sharmi / Sep 26th 2024, 2:46 pm
image

Advertisement

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் 1994- 1996 ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு இடைப்பட்டதாக இருக்கும் என மன்றில் இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி வி.கே.நிறஞ்சன் தெரிவித்தார். 

கொக்குத்தொடுவாய்  மனித புதைகுழி வழக்கு இன்றையதினம்(26) நீதிமன்றில் எடுத்து கொள்ளப்பட்டதை தொடர்ந்து ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி வழக்கு இன்று எடுத்து கொள்ளப்பட்ட போது ராஜ்சோமதேவாவின் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 

நீதிமன்றத்தினால் அந்த அறிக்கையில்,  அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் 1994 ஆம் ஆண்டுக்கும் 1996 ஆம் ஆண்டு காலப்பகுதிக்குள் இடைப்பட்டதாக இருக்கும் என்று அவருடைய இறுதி அறிக்கை இருந்ததாக நீதிமன்றில் கூறப்பட்டிருந்தது.

அத்தோடு  சட்ட வைத்திய அதிகாரியினால் கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட வி.பு//லி/களின் இலக்க தகடு இலக்கங்களும், ஆடைகளில் இருந்து எடுக்கப்பட்ட இலக்கங்களும் இன்று நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 

அந்த இலக்கங்களை பொது மக்களுக்கு அறிவிக்க வேண்டும் என்றும், அதனை உரிய முறையில் அறிவிக்க வேண்டும் என்றும் இன்று நீதிமன்றம் அறிவித்தது. 

அதன்படி, அதுபற்றி அறிவுள்ளவர்கள் நீதிமன்ற பதிவாளருக்கு அது சம்பந்தமாக தெரிவிக்க வேண்டிய தேவை இருக்கின்றது. 

இந்த ஒட்டு மொத்த அறிக்கைகளும் மார்கழி மாதம் 12 ஆம் திகதி நீதிமன்றில் தாக்கல் செய்ய இருக்கின்றது. வரவேண்டிய மீதி அறிக்கைகளையும் நீதிமன்றம் நினைவூட்டலை அனுப்பி அறிக்கைகளை பெற்றுக்கொள்ள இருக்கிறது. 

இந்த வழக்கு மீண்டும் டிசம்பர் 12 ஆம் திகதி எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.



கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி வழக்கு- இறுதி அறிக்கை சமர்ப்பிப்பு- சட்டத்தரணி நிறஞ்சன் தெரிவிப்பு. முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் 1994- 1996 ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு இடைப்பட்டதாக இருக்கும் என மன்றில் இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி வி.கே.நிறஞ்சன் தெரிவித்தார். கொக்குத்தொடுவாய்  மனித புதைகுழி வழக்கு இன்றையதினம்(26) நீதிமன்றில் எடுத்து கொள்ளப்பட்டதை தொடர்ந்து ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி வழக்கு இன்று எடுத்து கொள்ளப்பட்ட போது ராஜ்சோமதேவாவின் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்றத்தினால் அந்த அறிக்கையில்,  அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் 1994 ஆம் ஆண்டுக்கும் 1996 ஆம் ஆண்டு காலப்பகுதிக்குள் இடைப்பட்டதாக இருக்கும் என்று அவருடைய இறுதி அறிக்கை இருந்ததாக நீதிமன்றில் கூறப்பட்டிருந்தது.அத்தோடு  சட்ட வைத்திய அதிகாரியினால் கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட வி.பு//லி/களின் இலக்க தகடு இலக்கங்களும், ஆடைகளில் இருந்து எடுக்கப்பட்ட இலக்கங்களும் இன்று நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த இலக்கங்களை பொது மக்களுக்கு அறிவிக்க வேண்டும் என்றும், அதனை உரிய முறையில் அறிவிக்க வேண்டும் என்றும் இன்று நீதிமன்றம் அறிவித்தது. அதன்படி, அதுபற்றி அறிவுள்ளவர்கள் நீதிமன்ற பதிவாளருக்கு அது சம்பந்தமாக தெரிவிக்க வேண்டிய தேவை இருக்கின்றது. இந்த ஒட்டு மொத்த அறிக்கைகளும் மார்கழி மாதம் 12 ஆம் திகதி நீதிமன்றில் தாக்கல் செய்ய இருக்கின்றது. வரவேண்டிய மீதி அறிக்கைகளையும் நீதிமன்றம் நினைவூட்டலை அனுப்பி அறிக்கைகளை பெற்றுக்கொள்ள இருக்கிறது. இந்த வழக்கு மீண்டும் டிசம்பர் 12 ஆம் திகதி எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement