• Jan 04 2026

கொக்குதொடுவாய் மனித புதைகுழி...! 3ஆம் கட்ட அகழ்வு பணி தொடர்பான வழக்கு இன்று...! samugammedia

dileesiya / Feb 22nd 2024, 10:29 am
image

கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி தொடர்பான குறித்த வழக்கானது இன்றையதினம்(22)  முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் இடம்பெறவுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்குதொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியின் முதல் கட்ட அகழ்வானது 06.09.2023 அன்று ஆரம்பமாகி பதினொரு நாட்கள் நடைபெற்று 17 உடற்பாகங்கள் மீட்கப்பட்ட நிலையில் இடைநிறுத்தப்பட்டிருந்ததுடன், மீண்டும் அகழ்வின் இரண்டாம் கட்ட பணிகள் கடந்த 20.11.2023 அன்று ஆரம்பிக்கப்பட்டு தொடர்ச்சியாக ஒன்பது நாட்கள் நடைபெற்று  40 எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளதுடன் இரண்டாம் கட்ட அகழ்வு பணி இடைநிறுத்தப்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் ஆரம்பிப்பது தொடர்பில் இன்றையதினம்  வழக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

கொக்குதொடுவாய் மனித புதைகுழி. 3ஆம் கட்ட அகழ்வு பணி தொடர்பான வழக்கு இன்று. samugammedia கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி தொடர்பான குறித்த வழக்கானது இன்றையதினம்(22)  முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் இடம்பெறவுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்குதொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியின் முதல் கட்ட அகழ்வானது 06.09.2023 அன்று ஆரம்பமாகி பதினொரு நாட்கள் நடைபெற்று 17 உடற்பாகங்கள் மீட்கப்பட்ட நிலையில் இடைநிறுத்தப்பட்டிருந்ததுடன், மீண்டும் அகழ்வின் இரண்டாம் கட்ட பணிகள் கடந்த 20.11.2023 அன்று ஆரம்பிக்கப்பட்டு தொடர்ச்சியாக ஒன்பது நாட்கள் நடைபெற்று  40 எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளதுடன் இரண்டாம் கட்ட அகழ்வு பணி இடைநிறுத்தப்பட்டிருந்தது.இதனை தொடர்ந்து மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் ஆரம்பிப்பது தொடர்பில் இன்றையதினம்  வழக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement