• Sep 18 2026

கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்.

dorin / Sep 17th 2026, 3:09 pm
image

கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் புதன்கிழமை(16.09.2026) பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கந்தசாமி பிரபு தலைமையில், பிரதேச செயலாளர் அமலினி கார்த்தீபனின் ஏற்பாட்டில் இக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பிரதேச செயலகப் பிரிவில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன், எதிர்கால அபிவிருத்திப் பணிகளுக்கான முன்னேற்பாடுகள் மற்றும் பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டன.

இதன்போது சின்னப் புணாணைப் பகுதியில் நிலவும் குடிநீர்ப் பிரச்சினை, நெல்கொள்வனவு நடவடிக்கைகள் மற்றும் பனிச்சையடிக் குளத்தின் விஸ்தரிப்பு, காரமுனை கிராமத்தில் இடம்பெறும் காடழிப்பு மற்றும் காணி ஆக்கிரமிப்பு, சட்டவிரோத மண்அகழ்வு, கதிரவெளி பிரதேசத்தில் கடல் அரிப்பைத் தடுக்கும் செயற்றிட்டம், மதுரங்கேணி வீட்டுத்திட்ட அபிவிருத்தி, மேவாண்டகுளக் கிராம மேட்டு நிலப் பயிர்ச்செய்கையாளர்களின் காணி விடுவிப்பு, மீனவர் கூட்டுறவுச் சமாசத்திற்குத் தேவையான காணி மற்றும் கட்டடத் தேவைகள், வாகரை 'மில்கோ' நிறுவன அபிவிருத்தி போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டன.

மேலும், பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாதின் கோரிக்கைக்கு அமைவாக, தோணிதாண்டமடு கிராமத்தின் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகார எல்லையை மட்டக்களப்பு மாவட்ட வனஜீவராசிகள் திணைக்கள அதிகார எல்லைக்குள் மாற்றுவதற்கான தீர்மானம் கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

இக்கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் இ.சிறிநாத், ஞா.சிறிநேசன், கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச சபைத் தவிசாளர், பிரதேச சபை உறுப்பினர்கள், திணைக்களத் தலைவர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், விவசாய மற்றும் சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம். கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் புதன்கிழமை(16.09.2026) பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கந்தசாமி பிரபு தலைமையில், பிரதேச செயலாளர் அமலினி கார்த்தீபனின் ஏற்பாட்டில் இக்கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் பிரதேச செயலகப் பிரிவில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன், எதிர்கால அபிவிருத்திப் பணிகளுக்கான முன்னேற்பாடுகள் மற்றும் பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டன.இதன்போது சின்னப் புணாணைப் பகுதியில் நிலவும் குடிநீர்ப் பிரச்சினை, நெல்கொள்வனவு நடவடிக்கைகள் மற்றும் பனிச்சையடிக் குளத்தின் விஸ்தரிப்பு, காரமுனை கிராமத்தில் இடம்பெறும் காடழிப்பு மற்றும் காணி ஆக்கிரமிப்பு, சட்டவிரோத மண்அகழ்வு, கதிரவெளி பிரதேசத்தில் கடல் அரிப்பைத் தடுக்கும் செயற்றிட்டம், மதுரங்கேணி வீட்டுத்திட்ட அபிவிருத்தி, மேவாண்டகுளக் கிராம மேட்டு நிலப் பயிர்ச்செய்கையாளர்களின் காணி விடுவிப்பு, மீனவர் கூட்டுறவுச் சமாசத்திற்குத் தேவையான காணி மற்றும் கட்டடத் தேவைகள், வாகரை 'மில்கோ' நிறுவன அபிவிருத்தி போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டன.மேலும், பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாதின் கோரிக்கைக்கு அமைவாக, தோணிதாண்டமடு கிராமத்தின் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகார எல்லையை மட்டக்களப்பு மாவட்ட வனஜீவராசிகள் திணைக்கள அதிகார எல்லைக்குள் மாற்றுவதற்கான தீர்மானம் கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.இக்கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் இ.சிறிநாத், ஞா.சிறிநேசன், கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச சபைத் தவிசாளர், பிரதேச சபை உறுப்பினர்கள், திணைக்களத் தலைவர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், விவசாய மற்றும் சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement