தேர்தல் முடிவுகள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில், இம்முறை நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது ஒன்றரை லட்சம் வாக்குகள் நிராரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இம்முறை தேர்தலில் வரலாற்றில் அதிகூடிய வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதன் காரணமாக எந்தவொரு வேட்பாளரும் 50 வீதம் வாக்குகளைப் பெற முடியாது என்றொரு வாதம் முன்வைக்கப்பட்டிருந்தது.
அதன் காரணமாக இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்பு வாக்குகளைப் பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்தன.எனினும் அவ்வாறு இரண்டாம், மூன்றாம் விருப்பு வாக்குகளை அளிப்பதற்கான சரியான முறை குறித்த தெளிவு உரிய முறையில் வழங்கப்படாத காரணத்தினால் அவ்வாறு இரண்டாம், மூன்றாம் விருப்பு வாக்குகள் அளிக்கப்பட்ட வாக்குச் சீட்டுகள் பெருமளவில் நிராகரிக்கப்பட்டுள்ளன.
விருப்பு வாக்குகள் குறித்து தெளிவின்மை: நீக்கப்பட்ட ஒன்றரை இலட்சம் வாக்குகள் தேர்தல் முடிவுகள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில், இம்முறை நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது ஒன்றரை லட்சம் வாக்குகள் நிராரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இம்முறை தேர்தலில் வரலாற்றில் அதிகூடிய வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதன் காரணமாக எந்தவொரு வேட்பாளரும் 50 வீதம் வாக்குகளைப் பெற முடியாது என்றொரு வாதம் முன்வைக்கப்பட்டிருந்தது.அதன் காரணமாக இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்பு வாக்குகளைப் பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்தன.எனினும் அவ்வாறு இரண்டாம், மூன்றாம் விருப்பு வாக்குகளை அளிப்பதற்கான சரியான முறை குறித்த தெளிவு உரிய முறையில் வழங்கப்படாத காரணத்தினால் அவ்வாறு இரண்டாம், மூன்றாம் விருப்பு வாக்குகள் அளிக்கப்பட்ட வாக்குச் சீட்டுகள் பெருமளவில் நிராகரிக்கப்பட்டுள்ளன.