பதுளை - எல்ல, கரந்தகொல்ல பிரதேசத்தில் தேங்கியுள்ள நீரை அகற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.
இதன்படி, இந்தப் பணிகள் நிறைவடைவதற்கு சுமார் 10 நாட்கள் தேவைப்படும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் ஆசிரி கருணாவர்தன தெரிவித்துள்ளார்.
தற்போது ஏற்பட்டுள்ள மண்சரிவு நிலைமை அதிகரிக்கும் பட்சத்தில் எல்ல – வெல்லவாய வீதி பாதிப்படையக்கூடும்.
எனவே, அதனை பாதுகாப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
எவ்வாறாயினும், மண்சரிவு அபாயம் உள்ளதாக அடையாளங்காணப்பட்டுள்ள பிரதேசத்தில் நீரை வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உமா ஓயா திட்டத்தினால் குறித்த பகுதிக்கு எந்தவித பாதிப்பும் இல்லை எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
பதுளையில் மண்சரிவு அபாயம் - எடுக்கப்பட்டட அவசர நடவடிக்கை பதுளை - எல்ல, கரந்தகொல்ல பிரதேசத்தில் தேங்கியுள்ள நீரை அகற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.இதன்படி, இந்தப் பணிகள் நிறைவடைவதற்கு சுமார் 10 நாட்கள் தேவைப்படும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் ஆசிரி கருணாவர்தன தெரிவித்துள்ளார்.தற்போது ஏற்பட்டுள்ள மண்சரிவு நிலைமை அதிகரிக்கும் பட்சத்தில் எல்ல – வெல்லவாய வீதி பாதிப்படையக்கூடும். எனவே, அதனை பாதுகாப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.எவ்வாறாயினும், மண்சரிவு அபாயம் உள்ளதாக அடையாளங்காணப்பட்டுள்ள பிரதேசத்தில் நீரை வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.உமா ஓயா திட்டத்தினால் குறித்த பகுதிக்கு எந்தவித பாதிப்பும் இல்லை எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளது.