• Mar 07 2026

தெல்தோட்டையில் மண்சரிவு; போக்குவரத்து பாதிப்பு

Chithra / Jan 6th 2026, 7:32 pm
image

 


கண்டி, தெல்தோட்டையில் நேற்று (05) இரவு முதல் மழை பெய்து வருவதால், அந் நகரில் இருந்து ஹேவாஹேட்ட நகருக்கு செல்லும் பிரதான வீதியில் நாராஹின்ன பகுதியில்  மண்சரிவு ஏற்பட்டுள்ளது.


மண்ணை அகற்றியபோதும் மீண்டும் மீண்டும் மண்சரிந்து கொண்டே இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளதோடு, பொதுமக்களும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


இதேவேளை கண்டி தெல்தோட்டை பகுதியில் பெய்து வரும் கடும் மழையால்  அந்தப் பகுதியில் அதிக அளவில் பனிமூட்டம்  நிலவியுள்ளது. 


அதே நேரத்தில், தெல்தோட்ட நகரின் பேருந்து நிலையம் அருகிலும் பனிமூட்டம் காணப்படுகின்றது. இதனால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. 


தெல்தோட்டையில் மண்சரிவு; போக்குவரத்து பாதிப்பு  கண்டி, தெல்தோட்டையில் நேற்று (05) இரவு முதல் மழை பெய்து வருவதால், அந் நகரில் இருந்து ஹேவாஹேட்ட நகருக்கு செல்லும் பிரதான வீதியில் நாராஹின்ன பகுதியில்  மண்சரிவு ஏற்பட்டுள்ளது.மண்ணை அகற்றியபோதும் மீண்டும் மீண்டும் மண்சரிந்து கொண்டே இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளதோடு, பொதுமக்களும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை கண்டி தெல்தோட்டை பகுதியில் பெய்து வரும் கடும் மழையால்  அந்தப் பகுதியில் அதிக அளவில் பனிமூட்டம்  நிலவியுள்ளது. அதே நேரத்தில், தெல்தோட்ட நகரின் பேருந்து நிலையம் அருகிலும் பனிமூட்டம் காணப்படுகின்றது. இதனால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement