• May 10 2026

4 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை

dorin / Dec 7th 2025, 8:56 pm
image

நாட்டில் சீரற்ற வானிலை காரணமாக  04 மாவட்டங்களுக்குத் தொடர்ந்தும் மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டட ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. 

அதற்கமைய, கண்டி மாவட்டத்தின் கங்கா இஹல கோரல, தும்பனே, மெததும்பர, அக்குறணை, குண்டசாலை, உடுநுவர, தொலுவ, உடுதும்பர, பாதஹேவாஹெட்ட, ஹாரிஸ்பத்துவ, மினிபே, கங்கவட்ட கோரல, பஸ்பாகே கோரல, பன்வில, ஹதரலியத்த, யட்டிநுவர, பாததும்பர, தெல்தோட்டை, பூஜாப்பிட்டிய மற்றும் உடபலாத ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இதற்கு மேலதிகமாக, கேகாலை மாவட்டத்தின் வரக்காபொல, அரநாயக்க, கலிகமுவ, ரம்புக்கனை, புளத்கொஹுபிட்டிய, யட்டியாந்தோட்டை, மாவனெல்லை மற்றும் கேகாலை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு ஆபத்தான இடங்களிலிருந்து வெளியேறுவதற்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

குருநாகல் மாவட்டத்தின் ரிதிகம, நாரம்மல, பொல்கஹவெல, மல்லவபிட்டிய, அலவ்வ மற்றும் மாவத்தகம ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டட ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. 

அத்துடன், மாத்தளை மாவட்டத்தின் யடவத்த, மாத்தளை, அம்பன்கங்க கோரல, பல்லேபொல, லக்கல பல்லேகம, ரத்தோட்டை, நாவுல, உக்குவெல மற்றும் வில்கமுவ ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு வெளியேறுவதற்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

4 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நாட்டில் சீரற்ற வானிலை காரணமாக  04 மாவட்டங்களுக்குத் தொடர்ந்தும் மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டட ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, கண்டி மாவட்டத்தின் கங்கா இஹல கோரல, தும்பனே, மெததும்பர, அக்குறணை, குண்டசாலை, உடுநுவர, தொலுவ, உடுதும்பர, பாதஹேவாஹெட்ட, ஹாரிஸ்பத்துவ, மினிபே, கங்கவட்ட கோரல, பஸ்பாகே கோரல, பன்வில, ஹதரலியத்த, யட்டிநுவர, பாததும்பர, தெல்தோட்டை, பூஜாப்பிட்டிய மற்றும் உடபலாத ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக, கேகாலை மாவட்டத்தின் வரக்காபொல, அரநாயக்க, கலிகமுவ, ரம்புக்கனை, புளத்கொஹுபிட்டிய, யட்டியாந்தோட்டை, மாவனெல்லை மற்றும் கேகாலை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு ஆபத்தான இடங்களிலிருந்து வெளியேறுவதற்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. குருநாகல் மாவட்டத்தின் ரிதிகம, நாரம்மல, பொல்கஹவெல, மல்லவபிட்டிய, அலவ்வ மற்றும் மாவத்தகம ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டட ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. அத்துடன், மாத்தளை மாவட்டத்தின் யடவத்த, மாத்தளை, அம்பன்கங்க கோரல, பல்லேபொல, லக்கல பல்லேகம, ரத்தோட்டை, நாவுல, உக்குவெல மற்றும் வில்கமுவ ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு வெளியேறுவதற்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement