• May 06 2024

5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை..!!Samugammedia

Tamil nila / Dec 30th 2023, 7:25 pm
image

Advertisement

5 மாவட்டங்களில் அடையாளம் காணப்பட்ட பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று (30) பிற்பகல் 2:30 முதல் நாளை (31) பிற்பகல் 2.30 மணி வரை குறித்த மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி, பதுளை மாவட்டத்தின் சொரணதொட்டை மற்றும் பசறை பிரதேசங்கள், கண்டி மாவட்டத்தில் உடுதும்பர பிரதேசம், மொணராகலை மாவட்டத்தில் மெதகம பிரதேசம், நுவரெலியா மாவட்டத்தில் ஹகுரன்கெத்த மற்றும் வலப்பனை பிரதேசங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து அந்த பகுதிகளில் வசிக்கும் மக்களை விழிப்புடன் இருக்குமாறும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் கேட்டுக்கொள்கிறது.

இதேவேளை, பதுளை மாவட்டத்தின் பதுளை, ஹாலிஎல மற்றும் பண்டாரவளை பிரதேசங்களுக்கும் மாத்தளை மாவட்டத்தின் லக்கல, பல்லேகம, ரத்தோட்டை, நாவுல ஆகிய பகுதிகளுக்கும் முதல் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை.Samugammedia 5 மாவட்டங்களில் அடையாளம் காணப்பட்ட பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இன்று (30) பிற்பகல் 2:30 முதல் நாளை (31) பிற்பகல் 2.30 மணி வரை குறித்த மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.இதன்படி, பதுளை மாவட்டத்தின் சொரணதொட்டை மற்றும் பசறை பிரதேசங்கள், கண்டி மாவட்டத்தில் உடுதும்பர பிரதேசம், மொணராகலை மாவட்டத்தில் மெதகம பிரதேசம், நுவரெலியா மாவட்டத்தில் ஹகுரன்கெத்த மற்றும் வலப்பனை பிரதேசங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.சுற்றுச்சூழலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து அந்த பகுதிகளில் வசிக்கும் மக்களை விழிப்புடன் இருக்குமாறும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் கேட்டுக்கொள்கிறது.இதேவேளை, பதுளை மாவட்டத்தின் பதுளை, ஹாலிஎல மற்றும் பண்டாரவளை பிரதேசங்களுக்கும் மாத்தளை மாவட்டத்தின் லக்கல, பல்லேகம, ரத்தோட்டை, நாவுல ஆகிய பகுதிகளுக்கும் முதல் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement